உள்ளடக்கத்துக்குச் செல்

பொருவழி பெருவிருத்தி மலைநாடா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருவழி பெருவிருத்தி மலைநாடா கோயில், இந்தியாவின் கேரளாவில் கொல்லம் மாவட்டம் குன்னத்தூர் வட்டத்தில் பெருவிருத்தி மலைநாடா அல்லது மலைநாடா என அறியப்படுகின்ற ஒரே ஒரு துரியோதனன் கோயிலாகும் . இங்குள்ள 'சங்கல்ப மூர்த்தி' 'துரியோதனன்' என்று நம்பப்படுகிறது. இது பொருவழி கிராமத்தின் எடக்காடு வார்டில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

மலைநாடா என்பதானது மலையில் (மாலா) ஒரு கோயில் (நாடா) எனப்படும். பிற கோயில்களில் உள்ளதைப் போல் இங்கு தெய்வமோ, கருவறையோ கிடையாது. தெற்கிலும் மேற்கிலும் உள்ள மலையின் கீழ் பரந்த தாழ்வான நெல் வயல்களும், கிழக்கிலும் வடக்கிலும் விவசாய நிலங்களும் உள்ளன. இங்கு மூலவருக்குப் பதிலாக சற்று உயர்ந்த நிலையில் ஒரு மேடை உள்ளது. மூலவரின் சிலை இல்லாத நிலையில், பக்தர்கள் 'சங்கல்பம்' என்ற நிலையில் கற்பனாசக்தி மூலமாகவும், புரிதல் மூலமாகவும் தம் பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.[1]

மலைநாடாவில் உள்ள 'சங்கல்ப மூர்த்தி' மகாபாரதத்தின் மாபெரும் இதிகாச பாத்திரமான ' துரியோதனன் ' ஆவார். 'தமோகுண' உந்துதல் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பெயர் பெற்ற கௌரவ மன்னனான 'துரியோதனன்', முதன்மைக் கடவுளாகப் போற்றப்படுவது இந்திய வரலாற்றில் தனித்துவமானதாகும். நாடுகடத்தப்பட்ட 'பாண்டவர்களை' கண்டுபிடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, துரியோதனன் மலைநாடா பகுதியில் பயணிக்கும்போது சோர்வடையவே, ஒரு வீட்டிற்குச் சென்று குடிக்கத் தண்ணீர் கேட்டார். அது காட்டுத்தம்சேரி கொட்டாரம் ஆகும். அங்கு பூசாரியும் நிலத்தின் ஆட்சியாளருமான மலைநாட அப்பப்பன் தங்கியிருந்தார். ஒரு வயதான பெண்மணி அவருக்கு விருந்தோம்பல் என்ற நிலையில் மரியாதை நிமித்தமாக அக்காலத்தில் வழக்கப்படி கள்ளைக் கொடுத்தார். குடித்து மகிழ்ந்த அரசன், அவள் குறவ குலத்தைச் சேர்ந்தவள் என்பதை அவள் அணிந்திருந்த 'குறத்தாலி'யைப் பார்த்தபின்னரே உணர்ந்தான். அந்த இடத்தின் தெய்வீகத்தன்மையையும் அமானுஷ்ய சக்திகளையும் கொண்ட அதன் மக்களையும் மன்னர் பாராட்டினார். அதன்பிறகு, 'ராஜதர்மத்தை' மேம்படுத்த, அரசன் மலையில் அமர்ந்து சிவனை வணங்கி, தன் மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்தார். ஒரு தொண்டு செயலாக, நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களையும், நெல் வயல்களையும் 'தேவஸ்தானத்திற்கு' இலவச உரிமையாகக் கொடுத்தார். இப்போதும்கூட மேற்கண்ட சொத்தின் நில வரியானது 'துரியோதனன்' பெயரில் வசூலிக்கப்படுகிறது. [2]

காந்தாரி, அரச அன்னை, துசலை, அவரது சகோதரி, கர்ணன், அவரது நெருங்கிய கூட்டாளி, கர்ணன், துரோணர், அவரது 'குரு', அவரது குடும்ப பிற உறுப்பினர்கள் முறையாகவும், வசதியாகவும் தங்கவும் வழிபடவும். 'குறவ' சாதியைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக இருக்கவும் மன்னர் உறுதி செய்தார்.

மலக்குடா திருவிழா

[தொகு]

இங்கு ஆண்டுதோறும் 'மலக்குடா' திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாம் பாதியில் கோடைக் காலத்தில் மலையாள மாதமான 'மீனம்' இரண்டாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஊரளியின் கொடியேற்றத்துடன் விழா துவங்கும். தற்போது 8 நாட்கள் கொண்டாட்டம் இருந்தாலும், அது தொடர்பான சடங்குகளில் மாற்றம் இல்லை.

திருவிழா நாளில் மதியம் ஊரளி தன்து உதவியாளர்களுடன் 'குருக்கல்சேரி பகவதி கோயிலுக்கு' சென்று தேவியை மலைநாடாவிற்கு அழைத்துவருவார். அவ்வாறாக ஊர்வலமாக வந்த பகவதி மலநாடா கோயிலுக்கு எதிரே உள்ள மண்டபமான தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்வார். அதன்பிறகு, ஊரளி காட்டுத்தம்சேரி கொட்டாரத்தில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்று, தனது உதவியாளர்களின் உதவியுடன் தன் பூசாரி உடையான 'கச்சகெட்டு' உடையுடன் 'தாலிக்காரன்', 'கலசக்காரன்', 'நாலுவீடர்' ஆகியோருடன் தயாராவார். ஊரளியின் தலைமையிலான குழுவினர் முதலில் மலைநாடாவில் வழிபாடு செய்வர். பின்னர் 'அடைபாட்' வழியாக 'முரவுகண்டம்' சென்று, அன்றைய 'கெட்டுக்காட்சி' என்றழைக்கப்படுகின்ற மிகவும் கண்கவர் நிகழ்வை ஆசிர்வதிப்பர்.

மலக்குடா விழாவின் பகுதியாக கேட்டுகழ்ச்சா விழா கொண்டாடப்படுகிறது. இது 'எடுப்பு கால' மற்றும் 'எடுப்பு குதிரை' வடிவில் பெரியதும் சிறியதுமான நூற்றுக்கணக்கான உருவங்கள் அங்கு அணிவகுக்க தொடர்ந்து, 7 'காரகால்' எனப்படுகின்ற பிரிவால் பெறப்படும்.பரந்த நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கானோரால் அது அழகாக ரசிக்கப்பட்டு பார்க்கப்படும். ஊரளி அவற்றை ஒட்டுமொத்தமாகப் பார்த்து, ஒவ்வொரு காட்சிப் பொருளையும் பார்வையிட்டு ஆசீர்வதிப்பார். சூரியன் மறையும்போது அந்த உருவங்கள் ஒவ்வொன்றாக நகர்ந்து, கோவிலை மூன்று முறை சுற்றி வந்து, திரும்பும். சில சமயங்களில் அங்கேயே தங்கும். இரவில் கலாச்சார நிகழ்ச்சிகளான 'நிழற்கூகூத்து' கதையை அடிப்படையாகக் கொண்ட "கதகளி" நடைபெறுவது வழக்கமாகும் [3]

அடுத்த மலக்குடா திருவிழா 22-மார்ச்-2024 அன்று நடைபெறவுள்ளது.

மலைநாடா தூக்கம்

[தொகு]

இப்பகுதியில் கொண்டாடப்படுகின்ற மிகவும் பிரபலமான மரபுகளில் இதுவும் ஒன்றாகும். தூக்கம் செய்யும் உரிமை குருக்கள்சேரியல் குடும்பத்தைச் சார்ந்தது. தற்போது குருக்கள்சேரில் குடும்பத்தினர் இச்சடங்கைச் செய்கின்றனர்.

ஸ்வர்ண கொடி

[தொகு]

பொருவழி பெருவிருத்தி மலைநாடா தேவஸ்வம் மிகவும் பெருமையுடன் ஸ்வர்ணக்கொடி எனப்படுகின்ற தங்கக் கொடியை பூட்டிப் பாதுகாக்கிறது. இது மலைநாடா அப்பூப்பனின் கொளரவச்சின்னமாகவும், அதிகாரத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. மன்னன் எனப்படுகின்ற ஆட்சியாளர், அத்தகைய கொடியை வைத்திருப்பது பாக்கியமாகக் கருதப்படுகிறது. தங்கத்தில் செய்யப்பட்ட இக்கொடி சிறந்த வேலைப்பாடுகளைக் கொண்ட விலையுயர்ந்த காட்சிப்பொருளாக உள்ளது.

பொதுமக்கள் ஸ்வர்ணக்கொடியினை கொடியேற்றம், மலநாட்டு உற்சவம்போன்ற விழா நாட்களில் மட்டுமே காணமுடியும். இதன்'தரிசனம்' வீட்டிற்கு நன்மையையும் செழிப்பையும் தருவதாக மக்கள் நம்புகின்றனர். [4]

பள்ளிபானா

[தொகு]

மகாவிஷ்ணு, சுப்ரமணியரின் உதவியுடன் 'அசுர தோஷத்தால்' தான் பாதிக்கப்பட்டதைக் கண்டார். வேலன் சமூகத்தைச் சேர்ந்தவர்களே உரிய சடங்கைச் செய்து மந்திரசக்தி கொண்ட தோஷத்திலிருந்து அவரை விடுவிக்கமுடியும். 'வேலன்' சமூகம் மூவுலகிலும் எங்கும் காணப்படா நிலையில், இறுதியாக அனைத்தையும் அறிந்த பரமேஸ்வரன் வேலனாகவும், பார்வதி வேலாட்டியாகவும், மகாகணபதியும் சுப்பிரமணியரும் பூதகணங்களாகவும் அங்கு வந்து 'பள்ளிப்பானா' எனப்படும் 'மஹாகர்மா' செய்து, பகவானை விடுவித்தனர்.ை அதிலிருந்து விடுவித்தனர் விபட்டனர். மனிதகுல வரலாற்றில் கேட்ட முதல் 'பள்ளிப்பானா' அது.

இவ்வகையில் ஒரு தெய்வத்தையும், நிலத்தையும், மக்களையும் துன்புறுத்தும் தீய சக்திகளை அகற்றும் திறன் கொண்ட ஒரு சடங்காக 'பள்ளிப்பனா' நம்பப்பட்டு வருகிறது. மலநாடாவில் இந்தச் சடங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் அனுசரிக்கப்படுகிறது. இது 'மலநாட அப்பூப்பனின்' தெய்வீக சக்தியை உயர்த்துவதாகவும், ஏழு 'காரர்கள்' மக்களை பணக்காரர்களாகவும் வளமானவர்களாகவும் ஆக்குவதாக நம்பப்படுகிறது.

'வேலன்' சமூகத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் கலைஞர்களாகவும், சம எண்ணிக்கையிலான "புறங்கடி" சமூகத்தினர் எதிர்ப்பாளர்களாகவும் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். 18 மஹத்கர்மங்களை நிறைவேற்ற முடிக்க 11 நாட்கள் ஆகும். விழாவை நடத்த சற்றே அதிகம் செலவாகும். முக்கிய 'கர்மாக்கள்' காப்புகெட்டு, இடுபானபலி, குழிபலி, பட்டதபலி, நினபலி, பஞ்சபூதபலி, ஆழிபலி, கிடாங்குபலி, மருகுபலி, பீடபலி, திக்பலி, மற்றும் கூம்புபலி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். [5]

கடைசி பள்ளிபானா 24-பிப்-2023 முதல் 07-மார்ச்-2023 வரை நடைபெற்றது.

அடுத்த பள்ளிபானா 2035 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]