உள்ளடக்கத்துக்குச் செல்

பொருள் மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருள் முகாமைத்துவம் அல்லது பொருள் மேலாண்மை என்பது விநியோகச் சங்கிலி யின் உருப்படியான பாகங்களைச் சார்ந்த நடவடிக்கைகளை குறிக்கும் தளவாடங்களுக்கான செயல்பாடுகளின் ஒரு கிளையாகும். குறிப்பாக இது உதிரி பாகங்களை கையகப்படுத்துதல் மற்றும் பதிலமர்த்தல், உதிரிகளை வாங்குவது மற்றும் ஆணை இடுவதற்கு தேவையான தரக் கட்டுப்பாடுகளை செயல்படுத்துதல், மற்றும் உதிரிப்பொருட்களை வாங்கக் கட்டளை இடுதல், வணிகம் செய்தல், மற்றும் பண்டசாலைகளை பராமரிப்பதற்கு தேவையான தரங்களை நிர்ணயித்து அவற்றை பராமரிப்பதைக் குறிப்பதாகும்.

ஒருமித்த கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள்

[தொகு]

இலக்கு

[தொகு]

பொருள் முகாமைத்துவத்தின் இலக்கு முக்கிய சேவைகளை திறமையாகக் கையாள்வது மேலும் அதன் மூலம் அவற்றை திரட்டி வலுவூட்டுவதாகும். வாகனங்களை செலுத்த வேண்டிய சரியான பாதைகளை உருவாக்கி, அதன் மூலமாக தரமான சேவைகளை வழங்குதல், சரக்குகளை சரியான நேரத்தில் கொண்டு சேர்த்தல், மற்றும் வாகனங்கள் மற்றும் நடைபாதை பயனர்களுக்கு இடையே நிலவி வரும் குழப்பங்களுக்கு தீர்வு காணுதல். விநியோகிக்க வேண்டிய இடங்கள் மற்றும் சரக்குகளை ஏற்ற/ இறக்க வேண்டிய இடங்களை மேலும் திறன் படும் வகையில் நிர்வாகம் செய்து மேலும் அதிகப்படியாக இருக்கும் பொருட்களை குறைப்பதற்கு வழிவகுப்பதாகும். கடினமான மற்றும் அபாயகரமான கழிவுகளை நீக்கும்போதும், அவற்றை இருப்பு வைக்கும்போதும் மற்றும் சுழற்சிமுறையின்போதும் அதன் விலை குறைந்து காணப்படுகிறது. பயனுடைமை உள்கட்டமைப்பு மற்றும் செயலாக்கும் கருவிகளை மாற்றியமைத்தல், போன்ற உத்திகளால், அந்த இடத்தின் காட்சித் தன்மை மேலும் மேம்பட்டதாக அமைக்க உதவுகிறது.[1]

தரக் காப்புறுதி

[தொகு]

விநியோகச் சங்கிலியில் பங்கேற்கும் பல உதிரி பாகங்களும் பொருட்களும் அதன் தர நிர்ணயத்திற்கு ஏற்றவாறு குறைந்த தர காப்புறுதியுடன் (QA) விளங்குவதை உறுதி செய்வது பொருள் முகாமைத்துவத்தின் தலையாய கடமையாகும். ஒரு பொருளுக்கான தரத்தின் அளவை நிர்ணயம் செய்வது மற்றும் அவ்வகையில் கிடைக்கப்பெறும் உதிரி பாகங்களை கையகப்படுத்துவது போன்ற செயல்பாடுகள் எழுத்து வடிவங்களில் மற்றும் விவாதங்கள் சார்ந்த கோப்புகளில் பதிவு செய்து காணப்படும், ஆனால் பணிமனையில் ஒவ்வொரு நாளிலும் பொருள் முகாமைத்துவம் சார்ந்த நடவடிக்கைகள் மிக்கவாறும் தரக் காப்பீட்டை உறுதி செய்வதை மையமாக கொண்டதாகவே இருக்கும். பொருட்களும், பாகங்களும் கொள்முதல் ஆணையிடுவதற்கு முன்பாகவே சோதனைகளுக்கு உட்படுகின்றன மற்றும் அவற்றின் பயன்பாட்டின் போதும் சோதிக்கப்படுகின்றன, அதன் மூலம் வழங்கல் தொடரில் குறுகிய மற்றும் நீண்ட கால பிரச்சனைகள் உருவாகாமல் இருப்பதை உறுதி செய்கின்றனர்.[2][2] மிகையாக தானியங்கி முறைமையுடன் மற்றும் அதிகமான அளவில் உற்பத்தி திறனுடன் செயல்படும் தொழில் நிறுவனங்களில், இவ்வாறு தரக் காப்பீட்டினை உறுதி செய்வது இன்றி அமையாததாகும், தவறான பாகங்கள் அல்லது உதிரிகள் தவறாக வழங்கல் தொடரில் வழங்கப்பெற்றால் நிலையான உற்பத்தி வேகம் தடைபடும், சில நேரங்களில் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தி, அதனால் அது வரை தயாரித்த தரக் குறைவுடன் உற்பத்தி செய்த பொருட்களை அகற்றிய பிறகே மேலும் தரமான உற்பத்தியை மீண்டும் தொடங்க இயலும். இதனால் ஒரு சிறு தவறுக்காக மணிக் கணக்கில் திருத்த வேலைகளில் ஆலையை சார்ந்த அனைவரும் பாடு பட்டு உழைக்க வேண்டும், மேலும் அதனால் நேரமும் வீணாகும், உற்பத்தியும் மிகையாக பாதிக்கப்படும், செலவுகள் கட்டுக்கடங்காமல் போவதால் நட்டம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அப்போது உற்பத்தி இலக்கின் அட்டவணை பாதிக்கப்படும்.

தர மதிப்பீடுகள்

[தொகு]

பொருள் முகாமைத்துவத்தின் மற்றொரு முக்கிய செயல்பாட்டு அங்கம் கீழ்படிதலை நோக்கி சீராகச் செல்வது. விநியோகச் சங்கிலி மேலாண்மை அல்லது முகாமைத்துவத்தை நிலைபடுத்த, விநியோகச் சங்கிலி செயல்முறைகள் சரியாக இருப்பதை உறுதி செய்வதற்கு பல தர மதிப்பீடுகள் கொண்ட சேவை செயல்முறைகளை பின்பற்றுவது அவசியமாகும். எடுத்துக்காட்டாக, உகந்த நேரத்தில் மட்டும் அல்லது மெலிந்த நிறைவாக்குதல் பாணிகளை பின்பற்றுகையில், அதற்கான செய்முறைகள் வேறுபடுவதோடு, அவற்றை முறைபடுத்துவதற்கு தேவையான தெளிவாற்றலும் மிகவும் முக்கியமாகும். குறிப்பாக உதிரி பாகங்களை ஒரு இடத்தில் இருந்து வாகனங்கள் மூலமாக வரவழைக்கும் பொழுது (கப்பல் வழி அல்லது இதர போக்குவரத்து இரயில் அல்லது சாலை சார்ந்த வாகனங்கள்) தொடங்கி சேமிப்புக் கிடங்குகளில் வைத்திருப்பது, மேலும் அங்கிருந்து வாங்கும் முகவர் தொடங்கி அவை சேரும் பணியிடம் வரையிலான முகாமைத்துவம் மிகவும் சிக்கலானதும், மேலும் கவனம் சிதறாமல் நமது குறிக்கோளை அடையும் வகையில் பிழைகள் எதுவும் இல்லாமல் செயலாற்ற வேண்டிய பொறுப்புணர்ச்சியுடன் செயலாக்க வேண்டிய முறைமைகள் அடங்கியதாகும். உதிரிகள் வழங்குபவரை சார்ந்து இருக்கும் கையிருப்பு முறைமைகளில் இருந்து வேறுபட்டு, நேரக் கட்டுப் பாட்டினைக் கருத்தில் கொண்டு, கணினி மூலமாக கையிருப்புகளை குறைந்த அளவில் கட்டுப்பாட்டுடன் செயல் படுத்தும் நம்பகமான ஆணையிடும் மற்றும் வரவழைக்கும், மற்றும் பல தரப்பு வழங்குவோர்களை ஒரே நேரத்தில் சமாளிக்கும் சாமர்த்தியத்துடன் விளங்கும் முறைமைகள் ஒழுங்கு படுத்த வேண்டும்.

தக்க வைக்கும் தன்மையை மேம்படுத்துவது

[தொகு]

பல வணிக நிறுவனங்கள் இன்றைய சூழ்நிலையில் தங்கள் இடங்களை தாறுமாறாக, ஒழுங்கு முறை இல்லாமல், சத்தம் மிகுந்த, பல சமயம் செயல்திறன் குறைவுள்ள சூழ்நிலையில் வைத்து இருப்பதை நாம் காணலாம். சரக்குகள் தாங்கி வரும் வண்டிகள் பாதசாரிகளுக்கு இடைஞ்சலாகவும், சரக்குகளை ஏற்றி இறக்கும் இடங்களில் பெட்டிகள் மற்றும் பொருட்கள் அங்கங்கே சிதறி வைத்திருப்பதையும், கழிவுப்பொருட்கள் மற்றும் பயன்படாத பொருட்கள் அகற்றப் படாமலும், கூடங்கள், மாடிப்படிகள் ஆகிய இடங்களில் தேவை இல்லாத பொருட்களை அடுக்கி வைத்திருப்பதையும் நாம் சகஜமாக காணலாம். கொஞ்சம் முன் யோசனை மற்றும் புதுப்பித்தல் நோக்குடன் செயல் பட்டால், இவ்வாறு முறைமைகளினால் ஏற்படும் வீண் சச்சரவுகள், நேரம் விரையமாதல், பாதுகாப்பின்மை ஆகிய பிரச்சினைகளை சுமுகமாக தீர்வு காண்பதுடன், மின் சக்தி சேமிப்பு, கார்பன் வெளியேற்றத்தின் மாத்திரையை குறைத்தல், போக்குவரத்து இடைஞ்சல்களுக்கு தீர்வு காண்பது, மேலும் அனைத்து இடங்களும் போதிய வெளிச்சம் மற்றும் கண்ணுக்கு இதமான காட்சிகள் கொண்டதாகவும் வடிவமைத்து அதனால் மேலுமதிகமாக பயனுறலாம்.

=== சுழற்சி ஓட்ட நிகழ்வுகளை மேம்படுத்துதல் ===வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு வகையான செயல்பாடும் திரும்பத் திரும்ப சுழற்சி ஓட்டங்கள் கொண்ட நிகழ்வுகளே என்பதை மனதில் கொண்டு நாம் செயல்பட்டால், ஒவ்வொரு இடத்திலும் நாம் காணும் மிகுதிகளைக் குறைத்து மேலும் உண்மையான பயன்பாட்டை அதிகரிக்கலாம். ஒரு திறமை வாய்ந்த பொருள் முகாமைத்துவத் திட்டம் தனித்தனி தீவுகளாக விளங்கும் வெவ்வேறு பிரச்சனைகளுக்கு ஒரு முகமான, சரியான முறையில் தடைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட்டால், அனைத்துக் காரணிகளையும் ஒன்றுபடுத்தி ஒரு ஒழுங்குமுறையுடன் கூடிய செயல்பாட்டினை நாம் முறைப்படுத்தலாம், எடுத்துக்காட்டாக, சரக்கு பொருட்களை வரவழைத்தல் (கப்பல், இரயில் அல்லது சாலை வழி), அவைகளைப் பெறுதல், மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடு போன்றவை. இன்றைய சூழ்நிலைகளில் கணினியின் உதவியுடன் மற்றும் வசதிகளுடன் வினாடிக்கு வினாடி என்ன மாற்றங்கள் நடைபெறுகின்றன என்பதைப் பொறுத்து நிகழ்வுகளை ஆங்காங்கே கட்டுப் படுத்த இயல்வதால், அதை செயல்படுத்தும் முறைமைகள் நமக்கு வீண் செலவுகளை குறைத்து, அனாவசியமான/ தேவையற்ற செயல்பாடுகள் மற்றும் தடைகளை நீக்கி, சுதந்திரமாக செயல்படலாம் மேலும் ஓரளவிற்கு இதனால் ஏற்படும் மன உளைச்சல்களில் இருந்தும் விடுபெறலாம். புதிய நோக்கத்துடன் வடிவமைக்கும் பொழுது, அனைத்து தேவைகள் மற்றும் உபாதைகளை மனதில் கொண்டு, சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியிடத்தை ஒரு மையமாக அரவணைத்து செயல் படுவது, மற்றும் தனித் தனியான வேறுபட்ட சேவை மையங்களை நிறுவுவதற்கு பதிலாக, திட்டமிட்டு, ஒருங்கிணைத்த சேவைகளை ஒரே இடத்தில் ஒரு கிரம வரிசையில் பரவலாக வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யலாம். எடுத்துக்காட்டு: அத்தியாவசியப் பொருட்கள், விலை உயர்ந்த பொருட்கள், அழிந்திடும் பொருட்கள், அடிக்கடி தேவைப்படும் பொருட்கள், எப்போதேனும் தேவைப்படும் ஆனால் மிகவும் முக்கியமான பொருள், போன்ற பகுப்புகள் மற்றும் அவற்றின் அளவு, தக்க வைப்பதற்கான நேரம் மற்றும் எடை அல்லது தர நிர்ணயம் செய்வதற்கான வசதிகள் போன்றவை. இது போன்ற மேம்படுத்திய சுழற்சிமுறை உட்கட்டமைப்பு கொண்ட வளாகத்தை உருவாக்கும் பொழுது, வாகனங்களின் போக்குவரத்து மற்றும் அவைகளுக்கு ஒதுக்கப்படும் இடம் மற்றும் நேர ஒதுக்கீடுகளையும் மற்றும் சேவைகள் வழங்குவதற்காக ஏற்படுத்தும் பாதைகள் மற்றும் வழிமுறைகள் தெளிவாக இருக்க வேண்டும், மற்றும் இவை அனைத்திலும் ஏதேனும் பிழைகள் அல்லது தாமதம் ஏற்பட்டால், அதற்கான மாற்று வழிமுறைகள் மற்றும் பாதைகள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எ.கா: ஒரு ஆபத்தான சூழ்நிலை, நெருப்பு அல்லது வெள்ளப் பெருக்கம். வாகனத்தின் தரம், முறை, அளவு, அது கொண்டு வரும் பொருளின் தன்மை (நச்சுப் பொருள்), மற்றும் பின் பற்ற வேண்டிய கால அட்டவணை அனைத்தும் சரியாக கணக்கில் கொண்டு, மேலும் அருகாமையில் உள்ள இடங்கள் மற்றும் வசதிகளையும் சரியான முறையில் புரிந்து கொண்டு (ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் இருக்கும் இடத்தில் இருந்து தூரம் மற்றும் பாதைகளின் தன்மை, போக்குவரத்து அடர்த்தி மற்றும் தடங்கல்கள் இல்லாத வழிப்பாதை) இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல் பட்டால், போக்குவரத்தில் சிக்கி மீள்வது, பாதசாரிகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் செயல்படுவது ஆகிய சிறு சிறு தடைகளையும் கணக்கில் கொண்டு மேலும் ஒழுங்கான முறையில் சேவைகள் வழங்க இயலும். பல்வேறு சேவை முனைகளை குழுவாக இருக்கும்படி அமைப்பதால் தேவை மிகுதி குறைந்து செயல்திறன் அதிகரிக்கிறது.

பொருள் முகாமைத்துவ வாரம்

[தொகு]

ஒவ்வொரு ஆண்டும், இந்த விநியோக சங்கிலி முகாமைத்துவத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழில் வல்லுனர்கள் மற்றும் அவர்களுடைய திறமையான செயல்பாட்டை போற்றும் வகையில், குறிப்பாக உடல் நல பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் வல்லுனர்களை சிறப்பிக்கும் முறையில், ஒரு வாரம் நீண்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தும் முறை செயல்பாட்டில் உள்ளது. இந்த விழாக்களை அச்சொசியேசன் போர் ஹெல்த் கேர் ரிசோர்ஸ் அண்ட் மடீரியல்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் நேசனல் ஹெல்த் கேர் ரிசோர்ஸ் அண்ட் மடீரியல்ஸ் மேனேஜ்மென்ட் ஆகிய இரு அமைப்புகள் இணைந்து வழங்குகின்றன. இதன் மூலம் விநியோக சங்கிலித்தொடர் முகாமைத்துவ வல்லுனர்கள் செய்துவரும் அரும் சேவைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, மேலும் அவர்கள் நோயாளிகளுக்கு வழங்கிவரும் உயர்ந்த தரம் கொண்ட நோயாளிகளின் உடல் நல மேம்பாட்டிற்கான அக்கறையை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது. இந்த ஆண்டு அதாவது 2010 ஆண்டின் பொருள் முகாமைத்துவ வாரம் அக்டோபர் 4-10 தேதிகளில் கொண்டாடுவார்கள்.

பயன்கள்

[தொகு]

ஒரு திறன் வாய்ந்த பொருள் முகாமைத்துவத் திட்டம் ஒரு நிறுவனம் சார்ந்த முதன்மைத் திட்டத்தை, உன்னதமாகத் தயாரித்து, பல இடங்களில் தோன்றும் இடைவெளிகளை நிரப்பி சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட முதன்மை திட்டத்திற்கு, மிகவும் பொறுப்பான மற்றும் திறமைசாலியான விடைகளை அளிக்கவல்லதாகும். ஒரு செயல்திறன்மிக்க பொருள் முகாமைத்துவ திட்டம் மூலம் ஒரு கழக வளாகம், பணியிடம் அல்லது ஒரு குடியிருப்பு வளாகத்திற்கு எண்ணற்ற நன்மைகள் குவிகிறது. முதல் முறையாக இதில் நுழைபவருக்கு, நீண்ட நாட்கணக்கில் செலவுகளை மிச்சப் படுத்தி சேமிக்கும் வாய்ப்புள்ளதாகும், ஏன் என்றால் ஒரு வளாகத்தின் மைய உள்கட்டமைப்பினை தொகுத்து, மறுசீரமைத்து, நன்றாக நிர்வாகம் செய்யும் பொழுது, ஆண்டுக்கான செலவுகள் கணிசமாக குறைகின்றன. ஒரு கழக வளாகம், பணியிடம் அல்லது குடியிருப்பு வளாகம் அதன் வளாக நிலவர சொத்தின் மதிப்பு நல்ல மற்றும் சிறந்த பலனை பெற்றுத் தரும்.

ஒரு செயல்திறனுள்ள ஒருங்கிணைந்த பொருள் முகாமைத்துவத் திட்டத்தின் மூலம் வாகனங்கள் செயல்பாடு மற்றும் புகை வெளியேற்றம், திடக் கழிவு, அபாயகரமான கழிவு, மீழ் சுழற்சி முறை மற்றும் பயனுள்ள சேவைகள் போன்றவைகளை மேலும் சிறப்பான முறையில் முகாமைத்துவம் செய்ய வழிவகுக்கிறது. அதன் காரணமாக, மேலும் “பசுமையான,” மேலும் தக்கவைக்கக் கூடிய, தக்கவைக்கும் படியான சுற்றுச்சூழல் உருவாக வழி வகுப்பதோடு, இன்றைய சூழ்நிலைகளில் நிறுவனங்கள் மேலும் சுற்றுச்சூழலை சார்ந்து இருக்க வேண்டிய நிர்பந்தத்தையும் ஒரு வகையில் சந்திக்க முடிகிறது. சொல்லப்போனால், இது போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த நன்மைகளால், ஆக்கத்திறனுடன் கூடிய பொருள் முகாமைத்துவ திட்டங்கள் வடிவமைப்பு மற்றும் புதுமைகளை புகுத்துவதற்கான செயல்பாடுகளால், ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம் (LEED)அமைப்பின் பாராட்டுதல்களையும், வரவுகளையும் பெற்றிட வழி வகுக்கும்.

மேலும் முடிவுரையாக, ஒரு பயனுள்ள பொருள் முகாமைத்துவ திட்டம் மூலம் அழகியலையும் மேம்படுத்தலாம். பாதுகாப்பல்லாத மற்றும் அருவருப்பான நிலைமைகளை நீக்குதல், முதன்மை சேவைகளை கண்ணுக்குத் தெரியாத இடங்களில் இருந்து செயல் படுத்துவது, மேலும் பாதசாரிக்கு உகந்த ஒரு சுற்றுச்சூழலை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் பணியிடத்தின் காட்சிக்குரிய மற்றும் பொருள் சார்ந்த சூழலை அழகு படுத்தி, மனதிற்கு இதம் தரும் வகையில் மாற்றி அமைக்கும்.[3]

தூர்வார் பொருள் முகாமைத்துவம்

[தொகு]

தூர் வாருவதற்கு மூன்று வேறுபட்ட முகாமைத்துவ உத்திகளை கையாளலாம்: திறந்த-வெளி வழியாக தண்ணீர் வெளியேற்றுவது, தேக்கி வைத்து (அணைச்சுவர் கட்டி) அகற்றுவது, மற்றும் உபயோகமுள்ள பயன்பாடு. திறந்த தண்ணீர் வழியாக வெளியேற்றுவது என்பது தூர் வாரிய பொருட்களை நதிகள், ஏரிகள், கழிமுகங்கள், அல்லது கடலில் ஒரு குழாய் வழியாக கொண்டு சென்று வெளியேற்றுவதாகும் அல்லது அண்டா தூர்வாரிகள் மூலம் அல்லது ஓடங்கள் வழியாக வெளியேற்றல். தேக்கி வைத்து அகற்றுவது என்பது தூர் வாரிய பொருளை ஒரு அணைச்சுவர் கடற்கரை அருகிலோ, அல்லது மேனிலத்திலோ அமைத்து அடைப்பது, மற்றும் குழாய் வழியாக இதர பயன்பாடுகளுக்கு எடுத்துச் செல்லலாம்:[4]

இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து அதனால் தூர் வாரிய பொருட்களை அகற்றும் பொழுது ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம், அவற்றை அப்படியே அதே வகையில், அல்லது இரசாயன முறைகளை பயன் படுத்தி, அல்லது உயிரியல் முறைமைகளை பயன்படுத்தி அதன் தன்மையை மாற்றி அமைக்கலாம் அல்லது குறைத்து வெளியேற்றலாம். பெரும்பாலான நீர்வழிதடங்கள் தொழில் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளதால், அங்குள்ள கசடுகளில் இந்த மாசுபட்ட பொருள்கள் சேர வாய்ப்புள்ளது. சரியான வகையில் நிர்வாகம் வாகம் வாகம் செய்ய வில்லை என்றால், தூர் வாருவது மற்றும் தூர் வாரிய பொருட்களை அகற்றுவது ஆகிய செயல்பாடுகள், தண்ணீரின் தன்மையைக் குறைத்து, அல்லது தண்ணீருடன் கூடிய அல்லது நிலம் சார்ந்த நுண்ணியிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். தூர்வாரும் பொருள் வெளியேற்றத்தில், சுற்றுபுறசூழல் பாதுகாப்போடு சிறந்த முறையில் செயல்படுவதற்கு ஒரு நல்ல திட்ட வரைபடம், திட்டம் மற்றும் முகாமைத்துவம் மிகவும் அவசியமாகும்.

பயனுள்ள உபயோகம்

[தொகு]

தூர்வாரிய பொருள் அல்லது இடத்தை பயன்படுத்துவது குறித்து பரவலாக பத்து பயன்படும் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவை:

 • இயற்கையாக அமைந்த வாழ்விடத்தை மறுசீரமைத்தல் /உயர்த்துதல் (ஈரநிலம் , மேனிலம், தீவு , மற்றும் நீர் வாழ்வன புழங்கும் இடங்கள், அவற்றில் நீர்வாழ் பறவை வகைகள் மற்றும் இதர பறவைகளும் அடங்கும்.)
 • கடற்கரை ஊட்டமளிப்பு
 • நீர் வேளாண்மை
 • பொழுது போக்கிற்கான பூங்கா மற்றும் ஒய்விடங்கள் (வணிக ரீதியான மற்றும் வணிக ரீதியல்லாத).
 • நீர் வேளாண்மை, வனப்பரிபாலனம், மற்றும் தோட்டக்கலை.
 • திடக் கழிவு முகாமைத்துவத்திற்கான சுரங்கப் பட்டை நிலச் சீராக்கம் மற்றும் நிலப் பரப்பை மூடுவதற்கான செயல்பாடுகள்.
 • கடற்கரை ஓர நிலத்தின் அரித்தல் கட்டுப்பாடு மற்றும் நிலைக்கவைத்தல் (நிரப்புதல், செயற்கை கடலடிப் பாறைகளை உருவாக்குதல், மூழ்கவைத்த கரைவிளிம்புகள், ஆகியவை.)
 • கட்டுமானம் மற்றும் தொழில் சார்ந்த பயன்பாடுகள், (துறைமுகங்களின் மேம்பாடு மற்றும் கட்டுமானம், விமான நிலையங்கள், நகர்புறம் மற்றும் இருப்பிடங்களை மேம்படுத்துதல்)
 • மூலப் பொருட்களை மாற்றம் செய்தல் (நிரப்புதல், அகழிகள், இலைகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், மற்றும் சாலைகள் மேம்பாடு).
 • பல்திற பயன்பாடு

ஜி. பாவிக் எழுதிய கட்டுரை

பார்வைக் குறிப்புகள்

[தொகு]
 1. http://enr.construction.com/opinions/viewPoint/archives/081002.asp பொருள் மேலாண்மை மூலம் பசுமை அடைதல்
 2. 2.0 2.1 மெண்ட்சர், ஜே. டி. டேவிட், டபிள்யு. ஜே. எஸ்.மின், எஸ்.நிக்ஸ், என்.டபிள்யு. ஸ்மித், சி.டி. ஜக்கரியா, சட்.ஜி. தேபைனே சப்ளை செயின் மானேஜ்மென்ட். ஜர்னால் ஆப் பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ் பேஜெஸ் 1-26, 2001, வால் 22; பார்ட் 2. ISSN 0735-3766
 3. name="Green">http://enr.construction.com/opinions/viewPoint/archives/081002.asp பொருள் மேலாண்மை மூலம் பசுமை அடைதல்
 4. http://el.erdc.usace.army.mil/dots/pdfs/epa/tech-frame-rev04.pdf பரணிடப்பட்டது 2010-02-16 at the வந்தவழி இயந்திரம் தூர்வாறும் பொருள் மேலாண்மையில் ஏற்படும் சுற்றுபுறசூழல் விளைவுகளை மதிப்பீடு செய்து மாற்று ஏற்பாடுகளை ஆராய்தல் - ஒரு தொழில்நுட்ப வரைச்சட்டம்

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருள்_மேலாண்மை&oldid=3691544" இலிருந்து மீள்விக்கப்பட்டது