பொருள்முதலியலும் பட்டறிவுத் திறனாய்வும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருள்முதலியலும் பட்டறிவுத் திறனாய்வும் (Materialism and Empiriocriticism, உருசியம்: Материализм и эмпириокритицизм) என்பது விளாதிமிர் லெனின் இயற்றி, 1909 இல் வெளியிடப்பட்ட மெய்யியற் பெருநூலாகும். இது சோவியத் ஒன்றியத்தில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மார்க்சீய-இலெனினீய மெய்யியலின் பகுதியாகக் கட்டாயமாக படிக்கவேண்டிய இயங்கியல் பொருள்முதலியல் நூலாக இருந்தது. இப்பனுவலில் இலெனின் மாந்தனின் புலன்காட்சிகள் முழுநிறைவாகவும் துல்லியமாகவும் புறநிலை உலகை உணர்த்துவதாக வாதிடுகிறார்.

இந்நூலின் முழுப்பெயர் பொருள்முதலியலும் பட்டறிவுத் திறனாய்வும். பிற்போக்கியல்பு மெய்யியல் குறித்த உய்யநிலை ஆய்வுரைகள் என்பதாகும். இது இலெனின் தலைமறைவாக ஜெனீவாவிலும் இலண்டனிலும் வாழ்ந்த காலத்தில் 1908 பிப்ரவரி முதல் அக்தோபர் வரை எழுதிய நூலாகும். இது 1909 இல் மாஸ்கோவில் சுவெனோ வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டது. இதன் மூலக் கையெழுத்துப் படியும் நூலுருவாக்கக் குறிப்புகளும் தொலைந்துவிட்டுள்ளன.

இந்நூலின் பெரும்பகுதி ஜெனிவாவிலும் கடைசி ஒருமாதம் இலண்டனில் இருந்தபோது எழுதப்பட்டுள்ளது. இவர் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள நிகழ்கால மெய்யியல், இயற்கை அறிவியல் நூல்களைப் பார்வையிட இலண்டனுக்குச் சென்றுள்ளார். இதன் சுட்டி 200 க்கும் மேற்பட்ட தகவல் வாயில்களைக் காட்டுகிறது.

இந்நூல் 20 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இது மார்க்சீய-இலெனினீய மெய்யியலின் நெறிகாட்டுநிலையைப் பெற்ற நூலாகும்.

மேற்கோள் காட்டிய மெய்யியலாளர்கள்[தொகு]

இலெனின் அகல்விரிவான மெய்யியலாளர்களை மேற்கோள்காட்டுகிறார்:

குறிப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]