பொன்னையா (நடனக் கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன்னையா (1804 - 1864) பரதநாட்டிய தஞ்சை நால்வருள் ஒருவர். சிறந்த இயலிசைப் புலவராகவும், நாட்டிய ஆசிரியராகவும் விளங்கியவர். இவர் "பரதநாட்டியத்தை கச்சேரி பாணியில் எந்த இடத்திலும் எப்பொழுதும் நடத்தக் கூடிய முறைகளை வகுத்தார். அதற்காக ஆழ்ந்த ஆராய்ச்சிகளையும் செய்தார். இன்றைக்கு ஆரம்பப்பாடமாக சரளி, ஜண்டை வரிசைகளை வகுத்த சிறப்புடன் நாட்டியத்திற்கும் ஆரம்பப்பாடமாக அடவுகள் பத்து என்று வகுத்த பெருமை பொன்னையாவிற்கு உரியது."[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பொன்னையா தஞ்சாவூர் சுப்பராயன் என்பவரின் இரண்டாவது மகனாவார். இவருடன் கூடப் பிறந்தவர்கள் சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர். தமிழ், தெலுங்கு, சமக்கிருத மொழிகளில் தேர்ச்சி பெற்றார். இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரிடம் இசைப் பயிற்சி பெற்றார். சகோதரர்கள் நால்வருக்கும் சரபோசி மன்னர் முன்னிலையில் இசை அரங்கேற்றம் நடைபெற்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பரத நாட்டியம் - சில குறிப்புகள் - 1". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-29 அன்று பார்க்கப்பட்டது.
  2. தஞ்சை நால்வர் – பொன்னையா, முனைவர் செ.கற்பகம்