உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்னுக்கு வீங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மைக்கட்டு நோய்
Classification and external resources
Child with mumps.
ஐ.சி.டி.-10 B26.
ஐ.சி.டி.-9 072
DiseasesDB 8449
MedlinePlus 001557
ஈமெடிசின் emerg/324  emerg/391 ped/1503
MeSH D009107

அம்மைக்கட்டு நோய் அல்லது கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி மம்ப்ஸ் வைரசினால் ஏற்படும் ஒருவகை நோய் ஆகும். அறிவியல் நூல்களில் இது மம்ப்ஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது.நோய் முற்தடுப்பு முறைகள் அறியப்படாத காலங்களில் இந்நோய் உலகளாவி பொதுவான சிறுவர்களைத் தாக்கும் நோயாக இருந்து வந்தது. தற்போது தடுப்பூசி கண்டறியப்பட்ட போதிலும் பல வளர்முக நாடுகளில் இந்நோய் காணப்படுகின்றது.

செவி மடலுக்குக் கீழ், உள் அமைந்து உள்ள உமிழ்நீர் சுரப்பி வீக்கம் அடைவதால் வலியுடன் கூடிய உப்பல் கன்னத்தில் தோன்றுகிறது. மனித உமிழ்நீர்ச்சுரப்பிகள் மூன்று வகைப்படும். அவை தாடையடிச் சுரப்பி, நாக்கு அடிச்சுரப்பி, செவியோரச் சுரப்பி என்பன. இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஐந்து முதல் பதினைந்து வயதுவரை உள்ள சிறுவர்களை இந்நோய் பொதுவாகத் தாக்குகிறது. நோய்ப்பட்ட சிறார்கள் செவியோர உமிழ்நீர்ச் சுரப்பியின் வீக்கத்தின் வலியால் வருந்துவர். உணவை விழுங்குவதிலும் பெரிதும் சிரமப்படுவர். இந்நோய்க்கான காரணமும் சிகிச்சைக்கான மருந்தும் அறியப்படாத அக்காலத்தில் இதனை அம்மை நோய்களில் ஒன்றாக, நமது முன்னோர்கள் கருதினர். சுகாதார விதிகளைக் கெடுபிடியாகக் கடைபிடிக்கச் செய்தனர். தாயாரின் தங்கச்சங்கிலியாகிய பொன் ஆபரணத்தை நோய்வாய்ப்பட்ட சிறுவர் கழுத்தில் போடுமாறு வலியுறுத்தினர். இதன் காரணமாக அம்மைக்கட்டு நோய்க்கு, பொன்னுக்கு வீங்கி என்ற பெயர் நிலைத்து விட்டது.

மரபுவழி மருத்துவம்

[தொகு]

கூகைக்கட்டுக்கு நவீன மருத்துவ வசதிகள் தற்காலத்தில் அறியப்பட்டுள்ளன. ஆயினும் இது ஒரு அம்மை நோயாகப் பார்க்கப்படுகின்ற காரணத்தினாலும் நேரடி மருந்து இன்மையாலும் மக்கள் மரவு வழியான மருத்துவ முறைகளில் அதிகம் அக்கறை காட்டுகின்றனர். செந்சந்தணம் மற்றும் பனங்காயின் சாறு என்பன கன்னப்பகுதியில் பூசப்படுகின்றன. பன்னீர் குடிப்பதற்குக் கொடுக்கப் படுகின்றது. கன்னத்தின் உப்பல் இறங்கியதும் வேப்பிலை இடப்பட்டு சூடாக்கப்பட்ட வெந்நீர் குளிக்க அனுமதிக்கப்படுகின்றது. நோயாளி தனிமைப் படுத்தப்படுவதுடன் வெளியே செல்ல அனுமத்திக்காமை என்பனவும் கடைப்பிடிக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னுக்கு_வீங்கி&oldid=3869265" இலிருந்து மீள்விக்கப்பட்டது