பொது மயக்கத் தமனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொது மயக்கத் தமனி
Gray506.svg
பெருந்தமனியிலிருந்து இடது புறத்தில் நேரடியாகவும் வலது புறத்தில் மேற்கை தலைநோக்கு தமனியிலிருந்து கிளையாகவும் பொது மயக்கத் தமனிகள் உயர்கின்றன.
Blausen 0170 CarotidArteries.png
பொது மயக்கத் தமனியும் அதன் கிளைகளும்
விளக்கங்கள்
இலத்தீன்Arteria carotis communis
முன்னோடிதமனி வளைவுக் குழல் 3
Fromதமனி வளைவுக் குழல், மேல் கை - தலை நோக்கு தமனி
Toஉட்கழுத்து மயக்கத்தமனி, வெளிக்கழுத்து மயக்கத்தமனி
உட்கழுத்து ஜுகுலார்ச் சிரை
Suppliesதலையும் கழுத்தும்
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.549
TAA12.2.04.006
FMA3939
உடற்கூற்றியல்

உடற்கூற்றியலில், இடது, வலது பொது மயக்கத் தமனிகள் (carotids, கரோடிடுகள்) (English: /kəˈrɒtɪd/[1][2] [3] ) என்பன தலைக்கும் கழுத்துக்கும் ஆக்சிசனேற்றப்பட்ட குருதியை எடுத்துச் செல்லும் தமனிகளாம்; இவை வெளிக்கழுத்து மயக்கத் தமனி எனவும் உட்கழுத்து மயக்கத்தமனி எனவும் கழுத்துப் பகுதியில் இரண்டாகப் பிரிந்துள்ளன.[4][5]

கட்டமைப்பு[தொகு]

பொது மயக்கத் தமனிகள் உடலின் இடது, வலது இருபுறங்களிலும் அமைந்துள்ளன. இத்தமனிகள் வெவ்வேறு தமனிகளிலிருந்து பிரிந்து வந்தாலும் சமச் சீர்மையுள்ளப் பாதையில் பயணிக்கின்றன. வலதுபுற பொது மயக்கத்தமனி கழுத்தில் மேற்கை - தலை நோக்கு தமனியிலிருந்து கிளம்புகின்றது; இடதுபுற பொது மயக்கத் தமனி மார்புக் கூட்டில் தமனி வளைவுக் குழலிலிருந்து கிளம்புகின்றது. இவை மேலும் கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் பகுதியில் கேடயக்கசிக் (தைராய்டு) குருத்து எல்லையில் வெளிக்கழுத்து, உட்கழுத்து மயக்கத் தமனிகளாக பிரிகின்றன.

இடது பொது மயக்கத் தமனியை இரண்டு பகுதிகளைக் கொண்டதாகக் கருதலாம்: மார்புக் கூட்டு பகுதி மற்றும் கழுத்துப் பகுதி. வலது பொது மயக்கத் தமனி கழுத்து அருகே கிளம்புவதால் சிறு மார்புக்கூட்டுப் பகுதியை மட்டுமே மொண்டுள்ளது.

பொது மயக்கத் தமனிகளின் சராசரி விட்டம் ஆண்களுக்கு 6.5 மிமீயாகவும் பெண்களுக்கு 6.1 மிமீயாகவும் உள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி 2வது பதிப்பு, 1989.
  2. Entry "carotid" in Merriam-Webster Online Dictionary.
  3. இத்தமனிகளில் ஏதேனும் தடை ஏற்பட்டால் மதிமயக்கம் ஏற்படுவதால் கிரேக்க மொழியில் உறக்கநிலை அல்லது மயக்கநிலை எனும் பொருள்படும் கரோடிசு என்ற சொல் இதன் மருத்துவப் பெயரான கரோடிடுகளுக்கு வேர்ச்சொல்லாகும்.
  4. "Anatomically specific clinical examination of the carotid arterial tree". Anatomical Science International 82 (1): 16–23. March 2007. doi:10.1111/j.1447-073X.2006.00152.x. பப்மெட்:17370446. 
  5. "On the shape of the common carotid artery with implications for blood velocity profiles". Physiological Measurement 32 (12): 1885–97. December 2011. doi:10.1088/0967-3334/32/12/001. பப்மெட்:22031538. 
  6. J. Krejza; M. Arkuszewski; S. Kasner; J. Weigele; A. Ustymowicz; R. Hurst; B. Cucchiara; S. Messe (April 2006). "Carotid Artery Diameter in Men and Women and the Relation to Body and Neck Size.". Stroke 37 (4): 1103–1105. doi:10.1161/01.STR.0000206440.48756.f7. பப்மெட்:16497983. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_மயக்கத்_தமனி&oldid=3306696" இருந்து மீள்விக்கப்பட்டது