பையாவுலா கேசவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பையாவுலா கேசவ்
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்ஒய். விசுவேசுவர ரெட்டி
தொகுதிஉரவகோண்டா
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினர்
பதவியில்
2015 – 4 ஜூன் 2019
தொகுதிஅனந்தப்பூர்
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
2004–2014
முன்னையவர்யெல்லாரெட்டி காரி சிவராம ரெட்டி
பின்னவர்ஒய். விசுவேசுவர ரெட்டி
தொகுதிஉரவகோண்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 மே 1965 (1965-05-14) (அகவை 58)
பெல்லாரி, இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்பி. ஹேமலதா
பிள்ளைகள்2

பையாவுலா கேசவ் (Payyavula Keshav) (பிறப்பு 14 மே 1965) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரின் உரவகொண்டா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்புடையவர். [1] உரவகோண்டா சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டார். [2]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

சுதந்திர இந்தியாவில் நில உச்சவரம்புச் சட்டம் அமலுக்கு வரும் வரை 2000 ஏக்கருக்கு மேல் வைத்திருந்த நிலப்பிரபுக் குடும்பத்தில் கேசவ் பிறந்தார். இவரது குடும்பம் சென்னை மாகாணத்தில் பணக்காரர்களில் ஒன்றாக இருந்தது. இவரது தந்தை, பையாவுலா வெங்கட நாராயணா 1975 இல் ராயதுர்க்கம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உருப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அனந்த்புரம் மாவட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார். [3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

1994 இல் என். டி. ராமராவ் முன்னிலையில் சேர்ந்த இவர் தெலுங்கு தேசம் கட்சியில் முப்பதாண்டுகளாக இருந்து வருகிறார். 1994 தேர்தலில் உரவகோண்டா தொகுதியில் போட்டியிட்டு [4] 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். [5] 1994 மாநில சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 294 இடங்களில் 214 இடங்களில் தெலுங்குதேசம் வெற்றி பெற்றது. [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "13th Assembly Elections in Andhra Pradesh 2009 Results – Anantapur district Verdict". பார்க்கப்பட்ட நாள் 5 November 2012.
  2. "'Hattrick' leaders test their luck for the fourth time". பார்க்கப்பட்ட நாள் 24 April 2015.
  3. "Payyavula Keshav Father Passed Away" (in en). ETV. https://www.youtube.com/watch?v=ymnEqQZPhN4. 
  4. "TDP Leader Payyavula Keshav Exclusive Interview || మీ iDream Nagaraju B.Com #4" (in ஆங்கிலம்).
  5. "IndiaVotes AC: Uravakonda 1994".
  6. "Andhra Pradesh Assembly Election Result 1994" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பையாவுலா_கேசவ்&oldid=3820552" இலிருந்து மீள்விக்கப்பட்டது