உள்ளடக்கத்துக்குச் செல்

பைசுல் லத்தீப் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசுல் லத்தீப் சௌத்ரி
பைசுல் லத்தீப் சௌத்ரி (2017)
பைசுல் லத்தீப் சௌத்ரி (2017)
பிறப்புபைசுல் லத்தீப் சௌத்ரி
3 சூன் 1959 (1959-06-03) (அகவை 65)
மைமன்சிங்
தொழில்இராஜதந்திரி, பொருளாதார நிபுணர், எழுத்தாளர், ஆசிரியர்
மொழிவங்காளதேசர்
கல்விமுதுகலை பட்டதாரி
கல்வி நிலையம்தாக்கா பல்கலைக்கழகம்
கருப்பொருள்பொருளாதாரம், அரசியல் அறிவியல், வருவாய் நிர்வாகம், இலக்கியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பொது நிர்வாகத்தில் ஊழலை தடுப்பது

பைசுல் லத்தீப் சௌத்ரி (Faizul Latif Chowdhury, பிறப்பு: 1959 சூன் 3) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசு ஊழியரான இவர் தற்போது வங்காளதேச தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை இயக்குராக பணியாற்றுகிறார்.[1] பொது நிர்வாகத்தில் ஊழல், வரிக் கொள்கை, வரி ஏய்ப்பு, வரி தவிர்ப்பு, கடத்தல், சர்வதேச வர்த்தகக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கல்வித் தலைப்புகளில் இவர் எழுதியுள்ளார். இவர் வங்காள மொழி கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார், வங்க மொழி நவீன கவிஞரான ஜிபானானந்த தாசைப் பற்றியும் ஆராய்ச்சி செய்துள்ளார். தற்போது இவர் வங்காளதேசத்தின் சுதந்திர பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராகவும் பணிபுரிகிறார். 

கல்வியும், பயிற்சியும்

[தொகு]

இவர், தனது ஆரம்பக் கல்வியை வங்காளதேசத்தின் மைமன்சிங்கில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும், பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்லூரியில் அறிவியலையும் பயின்றார். இவர் கலந்து கொள்ளும் மைமன்சிங் மாவட்டப் பள்ளியில் உயர்நிலைக்கல்வியையும், ஆனந்த மோகன் கல்லூரியில் மேல்நிலைக் கலிவியையும் பயின்றார். பின்னர் இவர் தனது சமூக அறிவியலில் இளங்கலை பட்டத்தையும், முதுகலை பட்டத்தையும் டக்கா பல்கலைக்கழகத்தில் பயின்றார். ஆத்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையைப் படித்தார். பின்னர் 1992 இல், மோனாஷ் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பேராசிரியர் ஓவன் ஹியூஸ் என்பவர் இவரது ஆய்வறிக்கை மேற்பார்வையாளராக இருந்தார். இறுதியாக இவர் இலண்டன் பொருளியல் பள்ளியில் அரசுத் துறையில் பொது நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கையைப் படித்தார். இங்கு, பேராசிரியர் கீத் டவுடிங் என்பவர் இவரது ஆய்வுக் கண்காணிப்பாளராக இருந்தார். [2] வெவ்வேறு காலங்களில் இவர் தகவல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சியையும் பெற்றார்.

தொழில்

[தொகு]

இவரது தொழில் வாழ்க்கை டாக்காவிலிருந்து வெளியிடப்பட்ட சிறார் வார இதழான கிஷோர் பங்களா என்றப் பத்திரிகையில் தொடங்கியது. இருப்பினும், 1973 முதல் இவர் தனது பள்ளி நாட்களில் பங்களாதேஷ் அப்சர்வர், புர்படேஷ் ஆகியவற்றிற்காக எழுதத் தொடங்கியபோது இவரது இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. 1974 ஆம் ஆண்டில், ஒரு குறுகிய காலத்திற்கு, மைமன்சிங்கில் இருந்து வெளியிடப்பட்ட வங்காள வார இதழான பங்களார் தர்பானின் குழந்தைகள் பக்கத்தைத் திருத்தியுள்ளார். 1972 முதல். பின்னர் இவர் டாக்காவிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு சிறார் இதழான கிஷோர் பங்களா என்ற வார இதழுக்காக சிறிது காலம் (1978-80) பணியாற்றினார். பின்னர் இவர் சப்தஹிக் சித்ரபங்லா என்ற பத்திரிக்கையில் (1981–83) ஆசிரியராக பணியாற்றினார். தாக்கா பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்த பின் ரூபாலி வங்கியின் திட்டமிடல் பிரிவில் சிலகாலம் மூத்த அதிகாரியாக பணியாற்றினார்.

1983 ஆம் ஆண்டின் இறுதியில், வங்காளதேச அரசுப் பணியில் ஒரு அரசு ஊழியராக சேர்ந்தார். இவர் 2001 ஆம் ஆண்டில் வங்காளதேச அரசாங்கத்தின் துணை செயலாளராக நியமிக்கப்படும் வரை தேசிய வருவாய் வாரியம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அலுவலகங்களில் நீண்ட காலமாக வெவ்வேறு பதவிகளில் (1983–2000) பணியாற்றினார். இவர் 2005 இல் அரசாங்கத்தின் இணை செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.

இலக்கியப் படைப்புகள்

[தொகு]

இவர், வங்காளத்தின் மிகவும் பிரபலமான நவீன கவிஞரான ஜிபானானந்தா தாசின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்து விரிவாக பணியாற்றியுள்ளார். இவர் அவரது கவிதைகளில் பல தலைப்புகளை வெளியிட்டுள்ளார், அவரது பல கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஏராளமான கவிதைகளை மதிப்பாய்வு செய்துள்ளார். மேலும் கவிஞரின் இலக்கியப் படைப்புகள் குறித்தும், நடை குறித்தும் கட்டுரைகளை எழுதியுள்ளார். கவிஞரின் கற்பனை அல்லாத உரைநடை படைப்புகள் அனைத்தையும் சேகரித்து வெளியிட்டுள்ளார். நவீன காலத்திற்குப் பிந்தைய கவிதைகளின் அனைத்து அறிகுறிகளையும் கொண்ட ஒரு கவிஞராக ஜிபானந்தா தாசை இவர் கருதுகிறார். [3] கவிஞரைப் பற்றிய இவரது சமீபத்திய படைப்பு, எஸ்ஸே ஆப் ஜிபனானந்த தாஸ் என்பது 2009 இல் வெளியிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் கவிஞர் ஜிபானானந்தா தாசின் 101 கடிதங்களை ஒரு தொகுதியில் சேகரித்து வெளியிட்டார். [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Administrator, Super. "Director General". bangladeshmuseum.gov.bd.
  2. Lekhak Ovidhan, Bangla Academy, 1999, Dhaka.
  3. Chowdhury, Faizul Latif, ed. (1999). Jibanananda Daser 'Mrityur Aage' (literary criticism) (in Bengali). Dhaka: Dibya Prokash. இணையக் கணினி நூலக மைய எண் 49932069.
  4. Books of Faizul Latif Chowdhury
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசுல்_லத்தீப்_சௌத்ரி&oldid=3898097" இலிருந்து மீள்விக்கப்பட்டது