பேர்பூட் டு கெராட் (திரைப்படம்)
Appearance
பேர்பூட் டு கெராட் | |
---|---|
இயக்கம் | மஜித் மஜிதி |
தயாரிப்பு | மஜித் மஜிதி, ஃபவுத் நாகாசு |
கதை | மஜித் மஜிதி |
ஓட்டம் | 70 நிமிடங்கள் |
மொழி | பாரசீக மொழி |
பேர்பூட் டு கெராட் (பாரசீக மொழி: پابرهنه تا هرات (Barefoot to Herat)) ஈரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய ஆவணப்படம். இத்திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் தலிபான்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்குப் பின்னான ஆப்கான் அகதிகளின் வாழ்வைப் பற்றிய கதையை ஆவணப்படுத்துகிறது.
திரைப்படப் பின்புலம்
[தொகு]இத்திரைப்படமானது மேற்கு ஆப்கானிஸ்தானில் வடக்குக் கூட்டமைப்பின் கண்காணிப்பில் உள்ள மகாகி அகதிகள் முகாமிலும், கெராட் நகரிலுள்ள மாஷ்லக் அகதிகள் முகாமிலும் படமாக்கப்பட்டது. மனிதாபிமானமற்ற முறையில் நோய்களால் நிரம்பியிருந்தது அகதிகள் முகாம். அகதிகளிடம், குழந்தைகள், ராணுவ வீரர்கள் ஆகியோர்களிடம் மஜித் மஜிதி பேட்டிகள் எடுத்து இத்திரைப்படத்தை உருவக்கியுள்ளார்.[1][2][3]
விருதுகள்
[தொகு]- 2004 பிப்ரிஸ்கி விருது, கிரீஸ் [1] பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்