பேராவூரணி பெரிய குளம்
Appearance
பேராவூரணி பெரிய குளம் (Peravurani periya kulam) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு ஏரியாகும்.[1] இந்த ஏரி பேராவூரணி வட்டத்தில் பத்துக்கும் மேற்போட்ட சிற்றூர்களை இணைக்கும் விதமாக பெரியாக உள்ளது. இது 564 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் இருந்து 5,500 ஏக்கர் நிலம் பாசண வசதி பெறுகிறது.[2]
வெகுகாலமாக தூர்வாரப்படாமல் நீரின்றி வரண்டிருந்ததாக பேராவூரணி பெரிய குளம் இருந்தது. கஜா புயலுக்குப் பிறகு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெருக்கும் ஒரு பகுதியாக இக்குளத்தை தூர்வார பேராவூரணியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் முடிவு செய்தனர். அதற்காக கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தினர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "peravurani periya kulam".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ "சமூகப் பொறியாளர்கள் - 7: இந்தியாவின் 'ஏரி' மனிதர்!". 2024-07-18.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ மலர், மாலை (2019-07-16). "பேராவூரணியில் பெரியகுளம் தூர்வாரும் பணி - மத்திய குழுவினர் ஆய்வு".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)