பேரரசப் பென்குயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரரசப் பென்குயின்
அண்டார்க்டிக்காவின் சுனோ ஹில் தீவில் வளர்ந்த பென்குயின்களும் குஞ்சும்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Sphenisciformes
குடும்பம்: Spheniscidae
பேரினம்: Aptenodytes
இனம்: A. forsteri
இருசொற் பெயரீடு
Aptenodytes forsteri
Gray, 1844
பேரரசப் பென்குயின்களின் பரவல்
(இனம் பெருக்கும் இடங்கள் - பச்சையில்)
Aptenodytes forsteri

பேரரசப் பென்குயின் என்பதே உலகிலுள்ள பென்குயின்கள் யாவற்றினும் உயரமானதும் எடையுள்ளதும் ஆகும். இவை அண்டார்க்டிக்காவைத் தாயகமாகக் கொண்டவை. மற்ற பென்குயின்களைப் போலவே இவற்றாலும் பறக்கவியலாது. ஆண், பெண் பென்குயின்கள் அளவிலும் தோற்றத்திலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே இருக்கும். இவற்றின் உயரம் 48 அங்குலம் வரையும் எடை 22 முதல் 45 கிலோகிராம் வரையும் இருக்கும். இவற்றின் தலை, முதுகுப் பகுதிகள் கருப்பாகவும் வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும் மார்புப் பகுதி வெளிர்மஞ்சள் நிறத்திலும் காது மடலருகே நல்ல மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இவற்றின் இறக்கைப் பகுதி கடல் வாழ்க்கைக்கு ஏற்ப துடுப்பு போல் இருக்கும். மீன் இவற்றின் முதன்மையான உணவு.

பருவநிலை[தொகு]

அண்டார்டிகா பகுதியில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்த வகையான பெங்குயின்கள் வேகமாக அழிந்துவருகின்றன. 20ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டதைபோல 21ஆம் நூற்றாண்டிலும் இந்த வகைப்பறவைகள் அழியும் காலநிலையை பனிக்கட்டி உருகுதலின் காரணமாக ஏற்பட்டுள்ளது. அன்டார்க்டிக்காவின் ரோஸ் கடல் (Ross Sea) பகுதியில் கூட இந்த தாக்கம் இருக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2009). "Aptenodytes forsteri". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 13 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. penguins at risk of extinction, scientists warn
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரரசப்_பென்குயின்&oldid=2751598" இருந்து மீள்விக்கப்பட்டது