உள்ளடக்கத்துக்குச் செல்

ரோஸ் கடல்

ஆள்கூறுகள்: 75°S 175°W / 75°S 175°W / -75; -175
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்டார்டிகாவின் தென்முனைப் பெருங்கடலின் பகுதியான ரோஸ் கடல்
விக்டோரியா நிலத்தையும், மேரி பெயர்டு நிலத்தையும் பிரிக்கும் ரோஸ் கடலும், ரோஸ் பனித்தட்டும்

ரோஸ் கடல் (Ross Sea) அண்டார்டிகாவின் தென்முனைப் பெருங்கடலில் விரிகுடாவாக அமைந்த ரோஸ் தீவு மனிதக் கால் தடங்கள் பதியாத உலகின் கடைசியாக அமைந்த ஆழமிக்க கடலாகும். ரோஸ் கடல் அண்டார்டிகாவின் விக்டோரியா நிலத்திற்கும் மேரி பெயர்டு நிலத்திற்கும் இடையே அமைந்துள்ளது. [1]

நியுசிலாந்து நாட்டின் தெற்கே அமைந்த ரோஸ் கடல் தொடர்பான நிலப்பகுதிகள் அனைத்தும் நியுசிலாந்து உரிமை கோருகிறது.

10 மீட்டர் நீளமும், 495 கிலோ கிராம் எடை கொண்ட பெருங் கணவாய் மீன் ரோஸ் கடலில் 22 பிப்ரவரி 2007 அன்று பிடிபட்டது.

பெயர்க் காரணம்[தொகு]

ஜேம்ஸ் கிளார்க் ரோஸ் என்ற பிரித்தானிய கடலோடி 1841இல் ரோஸ் கடலை கண்டுபிடித்ததால், அவர் பெயராலாயே, இக்கடலுக்கு ரோஸ் கடல் எனப் பெயரிடப்பட்டது.

புவியியல்[தொகு]

ரோஸ் கடலின் மேற்கில் உள்ள நிலப்பகுதிக்கு ரோஸ் தீவு என்றும், கிழக்குப் பகுதிக்கு ரூஸ்வெல்ட் தீவு என்றும், தென் பகுதிக்கு ரோஸ் பனித் தட்டு என்றும், மேற்கு பகுதிக்கு மெக்முர்தா ஒலி என்றும், தென் துருவப் பகுதியிலிருந்து 200 மைல் தொலைவில் உள்ள தென் பகுதிக்கு கோல்டு கோஸ்ட் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

சூழலியல் பாதுகாப்பு[தொகு]

தென் அண்டார்டிகாவின் விலங்குகளையும், தாவரங்களையும், ரோஸ் கடலும் கொண்டுள்ளது. கோடைக் காலத்தில் ரோஸ் கடலின் அடித்தள ஆழங்களில் உள்ள மிதவை நுண்ம உயிரினத் தொகுதிகள் நீர் பரப்பின் மேல் மிதவைகளாக தென்படுகிறது. இவைகள் மீன்கள், துடுப்புகாலிகள், திமிங்கிலம், கடற்பறவைகள் போன்ற உயிரினங்களுக்கு உணவாகிறது.

ரோஸ் கடலை ஒட்டியும், கடற்கரையின் பல இடங்களில் அடிலாய்டு பென்குயின் மற்றும் பேரரசப் பென்குயின்களின் தங்கல் வரிசைகள் காணப்படுகிறது.

ரோஸ் கடல் பரப்பில் தூய்மையாகவும், அதிகப் படியான மீன் பிடித்தல் இன்றியும், மனித கால் தடம் அதிகம் பதியாததாலும் ரோஸ் கடல், உலகத்தின் இறுதி கடலாக கருதப்படுகிறது.

பன்னாட்டு கடல்சார் உயிரினங்கள் காப்பகம்[தொகு]

அண்டார்டிகாவின் தென்முனைப் பெருங்கடலின் ரோஸ் கடலில் 5,98,000 சதுர மைல் பரப்பில், உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கடல் உயிரினங்கள் காப்பகம் அமைக்க ஐக்கிய அமெரிக்க நாடு, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 24 நாடுகள், 28 அக்டோபர் 2016 அன்று பன்னாட்டு உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது. [2]இந்த ஒப்பந்தப்படி, இக்கடல் பரப்பில் மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாட தடை செய்யப்படுகிறது. [3]பன்னாட்டு கடல்சார் உயிரினங்கள் காப்பகம் நியுசிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளால் நிர்வகிக்கப்படும். [4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஸ்_கடல்&oldid=2137183" இலிருந்து மீள்விக்கப்பட்டது