பேயோன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெமர் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட பேயோன் கோயில்

பேயோன் ( Bayon ) கம்போடியாவில் உள்ள அங்கோர் என்ற இடத்தில் செழுமையாக அலங்கரிக்கப்பட்ட பௌத்த மதத்துடன் தொடர்புடைய கெமர் கோவிலாகும். 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மன்னர் ஏழாம் செயவர்மனால் கோயிலாகக் கட்டப்பட்டது. பேயோன் அங்கோர் தோமின் மையத்தில் உள்ளது. [1] [2]

பேயோனின் மிகவும் தனித்துவமான அம்சம், புத்தரின் அமைதியான மற்றும் சிரிக்கும் கல் முகங்கள் (அநேகமாக மன்னர் ஏழாம் செயவர்மனின் முகத்தை மாதிரியாகக் கொண்டவை). [3] பிரதான அமைப்பான, அங்கோர் பாதுகாப்பிற்கான யப்பானிய குழு இந்த கோயிலை கெமர் கட்டிடக்கலையின் "பரோக் பாணியின் மிகவும் குறிப்பிடத்தக்க வெளிப்பாடு" என்று விவரித்துள்ளது. இது அங்கோர் வாட்டின் பாரம்பரிய பாணியிலிருந்து வேறுபட்டுள்ளது. [4]

பெயர்க்காரணம்[தொகு]

பேயோனின் பெயர் 1880 இல் எட்டியென் அய்மோனியர் என்பவரால் வழங்கப்பட்டது. பேயோன் என்பது கெமரில் "பேயன்ட்" என்று எழுதப்பட்டதன் லத்தீன் மொழிபெயர்ப்பாகும். இது பாலி வெஜயந்த் அல்லது சமசுகிருத வைஜயந்த் என்பதன் சிதைந்த வடிவமாக இருக்கலாம் என்று அவர் கருதினார். இது இந்திரனின் வான் அரண்மனையின் பெயர். பேயோன் பூமிக்குரிய பிரதிபலிப்பு என்று கருதப்பட்டது. சமசுகிருத முன்னொட்டாக உள்ள பா என்ற முதல் எழுத்து "பா புனோம்" போன்ற பிற இடங்களில் இருப்பதைப் போலவே இருந்தது. மேலும் ஒரு பாதுகாவலன் அல்லது பாதுகாப்பாளரின் இருப்பைக் குறிக்கும். [5]

அங்கோர்-அறிஞரான மாரிஸ் கிளெய்சின் கூற்றுப்படி, பேயோன் "கற்களின் குவியல் போல், வானத்தை நோக்கி நிற்கும் ஒரு வகையான நகரும் குழப்பமாகத் தோன்றுகிறது." [6]

கோவிலின் பின்னணியில் பௌத்த அடையாளங்கள்[தொகு]

அறிஞர்களின் கூற்றுப்படி, மன்னர் ஏழாம் செயவர்மன் பேயோனில் காணப்படும் முகங்களுடன் வலுவான ஒற்றுமையைக் கொண்டுள்ளார்.

பேயோன் என்பது அங்கோரில் கட்டப்பட்ட கடைசி மாநிலக் கோயிலாகும். பல சிறிய மற்றும் உள்ளூர் தெய்வங்கள் இராச்சியத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நகரங்களின் பிரதிநிதிகளாக இருந்தாலும், பௌத்த மத தெய்வங்களை முதன்மையாக வழிபடுவதற்காக கட்டப்பட்ட ஒரே அங்கோரிய மாநில கோவிலாகக் கடுதப்படுகிறது. முதலில் ஒரு இந்துக் கோயிலாக இருந்த பேயோன் ( செயகிரி ) ஏழாம் செயவர்மனின் மாபெரும் நினைவுச்சின்ன கட்டுமானமாகவும், பொதுப் பணிகளின் மையப் பகுதியாகவும் இருந்தது. இது அங்கோர் தோமின் சுவர்கள், தா புரோம் நாக பாலங்களுக்கும் பொறுப்பாக இருந்தது [7]

கோவிலின் மேல் பகுதியிலிருந்து தொடங்கி, பல கோபுரங்களை ஆக்கிரமித்துள்ள "அமைதியான கல் முகங்கள்".[6]

கோவிலின் கோபுரங்களில் உள்ள 216 பிரம்மாண்டமான முகங்களிலுள்ள ஒற்றுமையால் பல அறிஞர்கள் இந்த முகங்கள் ஏழாம் செயவர்மனின் முக அமைப்பிற்கு ஒத்துள்ளதாக கருதுகின்றனர். ஒரு சிலர் இதுஅவலோகிதரின் முக அமைப்பு என்றும் சிலர் போதிசத்துவருக்கு சொந்தமானது என்றும் கருதுகின்றனர்.[8] ஆனால், இது பௌத்த மதம் சார்ந்தது அல்ல, பிரம்மாவுக்காகக் கட்டப்பட்ட கோயில் என்று உள்ளூர்வாசிகள் இன்னும் திடமான நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும் பௌத்தருக்கு மூன்று கண்கள் இருப்பதில்லை, ஆனால் சிலைகளுக்கு மூன்று கண்கள் செதுக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தங்கள் கருத்துக்கு உறுதியான காரணத்தைக் கூறுகிறார்கள். மூன்று கண்களைக் கொண்ட கடவுள் "சிவன்" ஆவார், அவர் "அழிவு கடவுள்" என்று அழைக்கப்படுகிறார், அவர் இந்து சமயங்களில் உள்ள மூன்று சக்திவாய்ந்த தெய்வங்களில் ஒருவர் - பிரம்மா, விஷ்ணு, மகேசுவரன் (சிவன்). பௌத்தரின் உருவங்களில் கழுத்தணிகள், பெரிய காதணிகள் மற்றும் கிரீடம் போன்ற நகைகள் அரிதாகவே சித்தரிக்கப்படுகின்றன. நான்கு திசைகளிலும் அமைக்கப்பட்ட முகங்கள் பிரம்மாவின் முகத்தை ஒத்திருப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர். இரண்டு கருதுகோள்களும் ஒன்றுக்கொன்று பிரத்தியேகமாக கருதப்பட வேண்டியதில்லை. கெமர் மன்னர்களின் பாரம்பரியத்தில் ஏழாம் செயவர்மன் தன்னை ஒரு "தேவராசன்" என்று நினைத்துக்கொண்டார் என்று அங்கோர் அறிஞர் ஜார்ஜ் கோடெஸ் கருதுகிறார். முக்கிய வேறுபாடு என்னவென்றால், அவரது முன்னோடிகளானவர்கள் இந்துக்களாக இருந்தபோதும், தங்களை பிரம்மாவின் துணையாகக் கருதினார்கள். [9]

செயவர்மனின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்கள்[தொகு]

செயவர்மனின் காலத்திலிருந்து, பேயோன் கோயில் அடுத்தடுத்த மன்னர்களின் கைகளில் பல பௌத்த சேர்க்கைகள் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்ட்டது. [6] 13 ஆம் நூற்றாண்டின் மத்தியில் எட்டாம் செயவர்மனின் ஆட்சியின் போது, கெமர் பேரரசு இந்து சமயத்திகு திரும்பியது. மேலும், அதன் மாநில கோவிலும் அதற்கேற்ப மாற்றப்பட்டது. பிற்கால நூற்றாண்டுகளில், தேரவாத பௌத்தம் மேலாதிக்க மதமாக மாறியது. இது இன்னும் கூடுதலான மாற்றங்களுக்கு வழிவகுத்தது. கோயில் இறுதியில் காட்டில் கைவிடப்பட்டது. கோவிலின் கிழக்கே உள்ள மொட்டை மாடி, நூலகங்கள், உட்பக்க சதுர மூலைகளில் உள்ள செதுக்கல்கள், மேல் மொட்டை மாடியின் பகுதிகள் ஆகியவை அசல் திட்டத்தின்போது ஒரு பகுதியாக இல்லாது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையாகக் கருதப்படுகிறது.

நவீன மறுசீரமைப்பு[தொகு]

20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில், பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம் கோயிலைப் பாதுகாப்பதில் முன்னணி வகித்தது. கட்டக்கலை புணரமைப்பு நுட்பத்திற்கு ஏற்ப அதை மீட்டெடுத்தது. 1995 ஆம் ஆண்டு முதல் அங்கோர் பாதுகாப்பிற்கான யப்பானிய அரசாங்கக் குழு முக்கிய பாதுகாப்பு அமைப்பாக இருந்து வருகிறது.

புகைப்படங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847, p.121
  2. Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., pp.378-382 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786167339443
  3. Freeman and Jacques, p.78.
  4. The Bayon Symposium
  5. Aymonier, Etienne (1880) (in fr). Excursions et reconnaissances. Saigon. பக். 185. https://books.google.com/books?id=QzAQAAAAYAAJ&dq=cambodge+le+nom+du+bayon&pg=PA185. 
  6. 6.0 6.1 6.2 Glaize, p.87.
  7. George Coedès (1968). Walter F. Vella. ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பக். 173–175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. 
  8. Coedės, p.137.
  9. Coedès, p.147.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bayon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேயோன்_கோயில்&oldid=3812438" இலிருந்து மீள்விக்கப்பட்டது