பேச்சு:வைக்கம் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்ற வருடம் இணையத்தில் ஜெயமோகனின் (கட்டுரை ஆக்குனர்) இதே கருத்தினைச் சொல்லும் கட்டுரை கடும் சர்ச்சைக்குள்ளானது. (வைக்கம் போராட்டத்தில் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் பங்கு என்ன என்பது பற்றி). இக்கட்டுரையில் பெரியார் வந்து கலந்துகொண்டார் என்று ஒரு வாக்கியத்தில் தந்திருப்பதை பெரியாரைப் பின்பற்றுவோர் எதிர்த்திருந்தனர். போராட்டத்தில் பெரியாரின் பங்கு இதைவிடப் பெரிது / போராட்டத்தையே அவர் தான் வெற்றி பெறச் செய்தார் என்பது அவர்களது கருத்து (காண்க [1]).

கடந்த எழுபது ஆண்டுகளாக தமிழகத்திலிருந்து வெளியாகும் நூலகளில் பெருவாரியானவை இப்போராட்டத்தில் பெரியாரது பங்கை இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை விட பெரிதாகவே சொல்கின்றன. பல ஆங்கிலப் புத்தகங்களும் அவற்றைப் பின்பற்றுகின்றன. (கேரள புத்தகங்கள் அப்படி இல்லை என்று ஜெயமோகன் விளக்கமளித்திருந்தார்.). எனவே ஏற்கனவே இணையத்தில் நடுநிலை கேள்விக்குறியாக்கப்பட்ட கட்டுரையென்பதால், இங்கும் அதே போல குறித்துள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 04:07, 21 சனவரி 2011 (UTC)

வரும் நாட்களில், பெரியாரியின் வைக்கம் தொடர்பான செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுரையில் பட்டியலிட்டு, பின்னர் ஒரு அடிக்குறிப்பில் அவரது பங்கு குறித்து இரு வேறு நிலைப்பாடுகள் நிலவுகின்றன என்பதையும் விளக்கி விட்டு இந்த “நடுநிலை” டேகினை எடுத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:28, 21 சனவரி 2011 (UTC)