பேச்சு:வரித் தேன்சிட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Sunbird இனப் பறவைகள் தேன்சிட்டு என அழைக்கப்பட Honeyeater வகைப் பறவைகளும் தேன்சிட்டு என அழைக்கப்படலாமா? --Anton (பேச்சு) 13:40, 19 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தமிழில் தேன்சிட்டு என்பது தேனுண்ணும் (பூந்தேன் உண்ணும்) சிறிய (சிட்டு) பறவைகள் எல்லாவற்றுக்கும் பொதுவான பெயர். ஆனால் பறவையியலின் வகைப்பாட்டுப் பெயர்கள் வேறுவிதமாகவோ இன்னும் துல்லியமாகவோ இருக்கலாம். Nectariniidae என்று கூறபப்டுவனவற்றை தேன்சிட்டு என்று சொல்லலாம். இந்தக் குடும்பத்தில் உள்ள 132 வகைப் பறவை இனங்களுக்கும் இச்சொல் பொருந்தும். இவை ஆப்பிரிக்கா, இந்தியா, ஆத்திரேலியா ஆகிய இடங்களில் வாழ்கின்றன. ஆனால் தேனுண்ணும் அமெரிக்கப் பறவை இனமாகிய ஓசனிச்சிட்டு (hummingbird) என்பனவும் ஆத்திரேலியாவில் உள்ள சற்று பெரிய பறவை இனமாகிய "Meliphagidae" என்பனவும் வேறு குடும்பங்களாகக் கருதுகின்றனர் என அறிகின்றேன். ஆத்திரேலியப் பெரிய தேனுண்ணிகளைத் தேன்புள் எனலாம். --செல்வா (பேச்சு) 16:24, 19 சனவரி 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வரித்_தேன்சிட்டு&oldid=1302769" இலிருந்து மீள்விக்கப்பட்டது