பேச்சு:வங்காளத் தமிழியல்
கோபி, வங்காள தமிழியல் என்பதும் பொருந்தும். இங்கு நாம் தமிழியலை விபரிக்கும் ஒரு adjective ஆகத்தான் பார்க்க வேண்டும். possessive ஆக பார்க்கத் தேவையில்லை. மற்றவற்றுக்கும் இந்த சிக்கல் உண்டு, எனினும் சில வழக்கத்தில் உள்ளவை, பிற ஒலிநயம் கருதி நாம் கவனிக்கவில்லை. சந்தி மிகுதிகளில் சற்று குழப்பமாகவே இருக்கின்றது. --Natkeeran 16:49, 2 மார்ச் 2007 (UTC)
- நற்கீரன், நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால் வங்காள தமிழியல் என்று வாசிப்பது சாத்தியமற்றது. இயல்பாக உச்சரிக்கும்போது அது தானாகவே வங்காளத் தமிழியல் என்றே உச்சரிக்கப்படுகிறது. ஆனால் த் சேர்க்கும்போது பொருள் மாறுகிறதா என்று பார்க்க வேண்டும். அந்தளவு ஆழமான அறிவு எனக்கில்லை. செல்வா போன்றோர் உதவிக்கு வந்தால் நன்று. --கோபி 16:53, 2 மார்ச் 2007 (UTC)
// கீர்த்திதிவாசகர் கம்பராமாயணத்தை தழுவியே ராமயணத்தை இயற்றினார் திருக்குறள் லன்யால் என்பரவரால் வங்க மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடைய படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
பாண்டிச்சேரியில் வசித்த அரவிந்தர் ஒரு வங்காளி ஆவார். //
இவை எப்படி வங்கத் தமிழியில் ஆகும்? இது போல் ஒவ்வொரு மொழியில் இருந்தும் இன்னொரு மொழிக்கு நூட்கள் மொழிமெயர்க்கப்படுவது வாடிக்கை தானே? தமிழ்-வங்காள மொழிகளுக்கு இடையே சொற் பரிமாறல்கள் இருந்தால் அதை தமிழியல் என சொல்லலாம். இரு நிலப்பகுதிகள், மக்களிடையே இருந்த தொடர்புகளை தமிழரியல் என்று வேண்டுமானல் சொல்லலாம். என் கேள்வி அறியாமையின் வெளிப்பாடாக இருந்தால் பொறுக்கவும்--Ravidreams 18:53, 2 மார்ச் 2007 (UTC)
- ரவி, தமிழியல் என்ற கட்டுரையில் குறிப்பிட்டது போல தமிழியல் என்பது தமிழர்களிடம் இருந்து தமிழியல் என்ற துறை தோன்றவில்லை. தமிழியல் = Tamil Studies மேற்குலகின் ஒரு படிப்புத்துறையாகவே தோற்றம் கண்டது. ஆகவே அதற்கு இரு முகம்கள் உண்டு. ஒன்று பிறர் எம்மை ஆய்வது. மற்றது நாம் நம்மை ஆய்வது. இந்த ஆய்வு வெறும் சொற்கள் பற்றிய ஆய்வு இல்லை. தமிழ் பின்புலத்தின் மொத்த ஆய்வையே Tamil Studies என்று குறிப்பிடுகின்றார்கள். ஏன் என்றால் தமிழரை ஆய தமிழே பிரதான மார்க்கம்/வழிமுறை.
- தமிழர்களின் அடையாளம் மொழி மையப்பட்டது. எனவே Tamil Studies Tamils Studies இரண்டும் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. இதை Tamilology என்றும் சொல்லலாம். எனவே த.வி. அதை பின்பற்றித்தான் கட்டுரைகளை ஆரம்பித்தேன். நீங்களும் பிற பயனர்களும் விரும்பினால் வங்காளத் தமிழரியல் என்று மாற்றலாம். எனக்கு ஆட்சோபனை இல்லை. ஒரு கோணத்தில் கூடிய பொருத்தமாகவும் இருக்கும்.
- ஆனால் நீங்கள் சுட்டியது போன்று சொற் பரிமாறுதல்கள் மட்டும் தமிழியல் என்பது மிகவும் குறுகிய வரையறை. அது பொருந்தாது. --Natkeeran 19:21, 2 மார்ச் 2007 (UTC)
அத்தோடு ரவி, நீங்கள் //கீர்த்திதிவாசகர் கம்பராமாயணத்தை தழுவியே ராமயணத்தை இயற்றினார்.// இது மேற்கோளில் தரப்பட்டிருக்கும் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட தகவல். வங்காள மக்களுக்கும் தமிழர்களுக்கும் எப்படிப்பட்ட தொடர்புகள் முன்னர் இருந்தன என்பதை இது சுட்டுகின்றது. --Natkeeran 19:25, 2 மார்ச் 2007 (UTC)
tamils studies என்று கேள்விப்பட்டதில்லை. ஆனால் tamil studies, tamilology இரண்டும் ஒன்றையே குறிக்கின்றன. தற்காலத்தில் tamil studies என்பதே பெருவழக்கென்று பேராசிரியர் சிவத்தம்பி சொன்னார். கோபி 19:52, 2 மார்ச் 2007 (UTC)
Start a discussion about வங்காளத் தமிழியல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வங்காளத் தமிழியல்.