பேச்சு:மெக்டொனால்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கை மக்டொனால்ட்ஸ் ஓரே ஒரு முறை உருளைக்கிழங்குப் பொரியல் சாப்பிட்டதுண்டு (நான் சைவம் என்பதால் வேறுஎதனையும் சுவைத்துப் பார்க்கவியவில்லை). பெரிதாகச் சொல்லுமளவிற்கு சுவை எனக் கூறமுடியாது. இதைவிட வவுனியாவில் உள்ள றோயல் கார்டின் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து. மக்டொனால்ட்ஸ் இல் அப்படியாகப் பெருமளவு மக்கள் சாப்பிடமாதிரித் தெரியவில்லை. "இந்த உணவுச்சாலையின் உணவுகள் பலராலும், குறிப்பாக சிறுவர்களால் விரும்பி உண்ணப்படுகின்றது." மிகைப்படுத்தப்பட்ட வர்த்தரீதியிலான விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்ட கூற்றாகவே எனக்குத் தெரிகின்றது. எனினும் மற்ற நாடுகளின் நிலவரத்தை அறியேன். --உமாபதி 16:19, 16 டிசம்பர் 2007 (UTC)

!! நிச்சியமாக நான் மக்டொனால்ட்ஸ் எந்த விதத்திலும் விளம்பரப்படுத்த வேண்டும் என்று அவ்வாறு எழுதவில்லை. சிறுவர்களைக் குறிவைத்தே அவர்கள் விளம்பரப்படுத்துவார்கள். சிறுவர்களை இழுப்பதின் மூலம் பெற்றோரையும் இழுக்கலாம் என்பதுவே அவர்களின் விளம்பரத் தத்துவம். அத்தோடு, சிறுவராக இருக்கும் பொழுது நல்ல அனுபவங்கள் இருந்தால், அங்கு பெரியவரான பின்னரும் வருவார்கள் என்பதும் அவர்களது கணிப்பு. பார்க்க: http://www.imdb.com/title/tt0390521/.
நற்கீரன், இணைப்பிற்கு நன்றி. இங்கே நான் பணிபுரியும் அலுவலகத்திலும் சென்றமாதம் மன அழுத்தம் பற்றிய விவாதங்கள் நடைபெற்றது. இதை கொண்டு நடத்திய உலக சுகாதார அமைப்பு ஐச் சேர்ந்த திரு சுவேந்திரன் கருத்தப்படி இவ்வாறான ஒழுங்காப் ஊட்ட நலன் இல்லாத வேக உணவுகளை உண்ணுவதும் ஒருவகையில் மன அழுத்தை உண்டு பண்ணுவதாகத் தெரிவித்திருந்தார். நானும் ஆராய்ந்து பார்த்தில் உண்மை இருப்பதாகவே தெரிகின்றது. --உமாபதி 17:07, 16 டிசம்பர் 2007 (UTC)