பேச்சு:முனையம்
Appearance
- இதற்கு முன், பேச்சு:இயக்கு தளம்#shell தமிழ் என்ன? என்பதிலும் இச்சொல் பற்றியுள்ளது.
terminalஎன்பதனையே முனையம் என அழைக்கலாமென எண்ணுகிறேன். (எ.கா)bus terminal.Shell என்பதற்கு முனையம் என்பதனை விட வேறு சொல் இருந்தால் நன்றாக இருக்கும்.--த♥ உழவன் +உரை.. 01:37, 30 ஆகத்து 2012 (UTC)
terminal என்பதற்கு முனையம் என்ற சொல் வழக்கத்தில் இருக்கும் சொல்லே. இந்தப் பொருளில் சரியாக வருகிறதோ என்பதை பிறர்தான் உறுதி செய்ய வேண்டும். --Natkeeran (பேச்சு) 18:36, 5 செப்டெம்பர் 2012 (UTC)
- முனையம் என்பது முனையில் இருப்பது, முடிவில் இருப்பது போன்ற பொருள்களுக்காக பேருந்து முனையம், தொடருந்து முனையம், மின்கல முனையம் இங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இங்கு முனையம் என்ற சொல் பொருத்தமாக இருக்காது. Peripheral computer என்பதால் சுற்றயல் கணி, terminal screen - சுற்றயல் கணித்திரை எனலாம். அல்லது பயனர் இடைமுகம் தவிர்த்து கருவுடன் உரையாடுவதால் கரு அணுக்கக் கணி எனலாம் --மணியன் (பேச்சு) 06:26, 13 செப்டெம்பர் 2012 (UTC)
- வின்டோசில் இதனை command prompt என்பார்களே அதுதான் இதுவா? லினக்சில் terminal என்பதும்,shell என்பதும் ஒன்றா? இதற்கு இன்னும் வேறுபெயர்கள் உள்ளனவா?சொல்மயக்கம் நீக்குவீர்.--த♥ உழவன் +உரை.. 04:58, 13 செப்டெம்பர் 2012 (UTC)
விண்டோசு எக்கு. பி. இயங்குதளத்தில் கட்டளை விழிப்பூட்டு என்றும் விண்டோசு 7இல் கட்டளை செயலழைப்பு என்றும் Command Prompt அழைக்கப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 12:56, 13 செப்டெம்பர் 2012 (UTC)