பேச்சு:மாலன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள திரு.சுப்ரமணி,

வணக்கம்.

விக்கிப்பீடியாவில் எனது பக்கத்தைச் செப்பமிட்டமைக்கு நன்றி.

கீழ்க்காணும் திருத்தங்களையும் செய்ய இயலுமா ?

1. நான் மாலன் என்றே அறியப்பட்டவன். எனவே மாலன் நாராயணன் என்றமைந்துள்ள தலைப்பை மாலன் என்று மட்டுமே இருப்பது போல மாற்ற இயலுமா?

2.பிற இணையதளங்களிலிருந்து படியெடுத்து இங்கு பதிப்பிக்க வேண்டாம் என்ற என்ற குறிப்பையும் நீக்கக் கேட்டுக் கொள்கிறேன். என் இணைய தளத்தில் வெளியாகி உள்ள குறிப்பை என் வாசகர் ஒருவர் என் அனுமதி பெற்றே நகலெடுத்து விக்கிப் பீடியாவில் பதித்திருந்தார். எனவே பிற இணையதளங்களிலிருந்து படியெடுத்து இங்கு பதிப்பிக்க வேண்டாம் என்ற என்ற குறிப்பையும் நீக்கி விடலாம் என்பது என் கருத்து.

விக்கிப்பீடியா மூலமே உரையாட எண்ணியிருந்தேன். ஆனால் அது சற்று சிக்கலாக இருக்கிறது.

மீண்டும் நன்றி

அன்புடன் மாலன்

  • மேற்காணும் கடிதத்தை மாலன் அவர்கள் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி இருக்கிறார். எனவே இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருந்த வார்ப்புரு நீக்கப்படுகிறது.
  • மாலன் நாராயணன் என்ற தலைப்பிலிருந்து மாலன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்படுகிறது.

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:09, 19 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

மன்னிக்க தற்போது தான் இந்த பேச்சுப் பக்கத்தை பார்வையிட்டேன். அதில் >>நான் மாலன் என்றே அறியப்பட்டவன். எனவே மாலன் நாராயணன் என்றமைந்துள்ள தலைப்பை மாலன் என்று மட்டுமே இருப்பது போல மாற்ற இயலுமா?<< இப்படி ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார். ஆனால் விக்கப்பீடியாவில் முழு பெயரில் தான் பக்கங்கள் உருவாக்கப்படுகிறது. இதுபற்றிய கொள்கைப் பக்கங்கள் (living person) இருந்தால் இங்கு பகிரவும். நன்றி -- Mdmahir (பேச்சு) 11:49, 1 செப்டம்பர் 2015 (UTC).
வேறு மாலன்கள் இல்லாதவரையில் மாலன் என்றே தலைப்பிடலாம். இருந்தாலும், மாலன் (எழுத்தாளர்) எனத் தலைப்பிடுவது நல்லது.--Kanags \உரையாடுக 12:13, 1 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாலன்&oldid=1908331" இலிருந்து மீள்விக்கப்பட்டது