பேச்சு:மார்க்சியப் பொருள்முதல் வாதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியாக்கியானம், சுயாதீனம் - தமிழில் என்ன? கட்டுரையை எளிமைப்படுத்தி எழுத வேண்டும். --ரவி 15:23, 19 மே 2008 (UTC)[பதிலளி]

வியாகியானம் என்பது விளக்கம் (விரிவான விளக்கம் என்று வேண்டுமானால் கூறலாம்). பொழிப்புரை என்பதும் இதுவே. என்ன வியாகியானம் என்றால் என்ன விளக்கம் என்று பொருள். சுயாதீனம், சிவாதீனம் என்றால் தன்னுரிமை பெற்றது. தன்னியல்புடையது. பிறவற்றால் கட்டுப்படுத்தப்படாமல் தானே தன்னிலையை ஆளும், ஆண்டுத் துய்க்கும் தன்மை. தன்னுரிமை, தன்னாண்மை (தன்னைத் தானே ஆளும் விடுபாட்டாண்மை).
கட்டுரையில் சில திருத்தங்கள் செய்துள்ளேன். பார்க்கவும்.
--செல்வா 16:20, 19 மே 2008 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கி இணைப்பு[தொகு]

@மு.மயூரன்:, ஆங்கில விக்கிப்பீடியாவில் Marxist materialism என்று தேடினால் Marxism க்கு வழிமாறுகிறது. Historical materialism என்ற ஆங்கில விக்கிபீடியா கட்டுரையினை இதற்கு இணையாகக் கருதலாமா?--இரவி (பேச்சு) 15:53, 23 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]