பேச்சு:மதீனா தேசிய பாடசாலை, சியம்பலாகஸ்கொட்டுவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் எங்கும் தேசியப் பாடசாலை என்று பயன்படுத்தப்படுவதில்லை. அரசாங்கம் தேசிய பாடசாலை என்று மட்டுமே பயன்படுத்துகிறது.--பாஹிம் 01:13, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தேசிய(ப்) பாடசாலை என்றால் அரசு(ப்) பாடசாலைகளா? அல்லது வேறு ஏதேனும் வகைகளா? மேலும் இங்கு ஒற்று வருவதில் என்ன தவறு? சிங்கள அரசாங்கம் தேசிய பாடசாலை என்று பயன்படுத்தினால் நாமும் அதனையே பின்பற்ற வேண்டுமா என்ன:)--Kanags \உரையாடுக 02:18, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
தேசிய பாடசாலைகள் என்பன இலங்கையின் நடுவண் அரசாங்கத்தால் நேரடியாகப் பராமரிக்கப்படும் பாடசாலைகள். அரசாங்கப் பாடசாலைகளில் ஏனையவை மாகாண சபைகளாலேயே பராமரிக்கப்படுகின்றன. சிங்கள அரசாங்கத்தில் அச்சொல்லைப் பயன்படுத்துவோர் தமிழர்களேயன்றிச் சிங்களவர்களல்லர். இலங்கையில் தமிழ் வழக்கில் அப்படிப் பயன்படுத்தப்படுவதில்லை. சிங்களவர்கள் எப்போதும் ஜாதிக பாஸல என்றே கூறுவர்.--பாஹிம் 02:59, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
முன்னைய மத்திய மகா வித்தியாலயங்கள் அல்லது மகா வித்தியாலயங்கள் இப்போது தேசிய பாடசாலை என அழைக்கப்படுகின்றனவா?--Kanags \உரையாடுக 07:11, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
இல்லை. தேசிய பாடசாலைகள் என்பன மகா வித்தியாலயங்கள் மற்றும் மத்திய மகா வித்தியாலயங்களை விடத் தரமுயர்ந்தவையாகவே மதிப்பிடப்படுகின்றன. கல்வி அமைச்சு அவற்றை நேரடியாகக் கண்காணிக்கிறது. மகா வித்தியாலயங்களும் மத்திய மகா வித்தியாலயங்களும் மாகாணக் கல்வி அமைச்சுக்களாலேயே பராமரிக்கப்படுவதுடன் ஒப்பீட்டளவில் வசதிக் குறைபாடானவையாகவும் உள்ளன. தேசிய பாடசாலைகளிலும் 1A, 1B, 1C என மூன்று நிலைகள் உள்ளன. தேசிய பாடசாலைகளுக்கு அடுத்தபடியாக நவோதயாப் பாடசாலைகளும் வெளிச்சவீட்டுப் பாடசாலைகளும் உள்ளன. ஒரு சில மகா வித்தியாலயங்களும் மத்திய மகா வித்தியாலயங்களும் நவோதயாப் பாடசாலைகள் என்ற தரத்தைக் கொண்டுள்ளன. உண்மையில் தேசிய, நவோதயா, வெளிச்சவீடு, மத்திய மகா, மகா, கனிட்ட போன்ற பதங்கள் பாடசாலைகளின் தரங்களையே குறிக்கின்றன. இவை அரசியல், பொருளாதார, சமூகக் காரணங்களால் மாறக் கூடியன. எனவே, இந்தச் சொற்களை நீக்கி விட்டு மேற்படி பாடசாலைகளைக் குறிப்பதற்கான வழக்கமொன்றை விக்கிப்பீடியாவிற் கொண்டுவர வேண்டும் என்பது எனது கருத்து. நீங்களும் உடன்பட்டால், அது பற்றி ஆலோசித்து இப்பெயர்களை மாற்றுவது நலம்.--பாஹிம் 07:36, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
நீங்கள் தந்துள்ள பெயர்கள் தமிழிலும் அவ்வாறேயே அழைக்கப்படுகின்றனவா? இலங்கையில் கல்வி என்ற தொடரில் இலங்கையில் பாடசாலைகள் என்ற கட்டுரையைத் தொடங்கலாம். இதனை எழுதுவதற்கு புன்னியாமீனே சிறந்தவர். அவரிடம் போதிய தகவல்கள் இருக்கும்.--Kanags \உரையாடுக 08:08, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
தமிழில் அழைக்கப்படும் முறைகளே மேலுள்ளவை. சிங்களத்தில் தேசிய பாடசாலை என்பதை ஜாதிக பாஸல என்று அழைக்கின்றனர். இலங்கையின் கல்வித்துறையிற் போதிய அனுபவம் உள்ளவரென்பதால் புன்னியாமீன் இது பற்றிய கட்டுரையைத் தொடங்கலாம்.--பாஹிம் 08:14, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி Kanags, பாஹிம் கட்டுரையை நான் ஆரம்பிக்கின்றேன். சற்று அவகாசம் தாருங்கள் --P.M.Puniyameen 08:42, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]