பேச்சு:பேர்ச்சைல்டு செமிகண்டக்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஃவேர்ச்சைல்டு என்பதை உச்சரிக்கவே முடியவில்லை. ஆங்கிலப் பதத்தைப் பார்த்தே உச்சரிக்க முடிந்தது. ஃபெயர்சைல்ட் என எழுத முடியாதா? Film Fair - ஃபில்ம் ஃபெயார் என்பது போல. மன்னிக்க வேண்டும், இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளப்புவதற்கு.--Kanags 08:24, 19 ஜூலை 2006 (UTC)

இத்தலைப்பு ஏற்பு இல்லை எனில், கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றைத்தேர்ந்தெடுங்க்ள், மாற்றிவிடுகிறேன். கீழ்க்காணும் மாற்றுப்பெயர்களில் சரியானதென்று நான் கருதுவதை முதலில் இடுகிறேன்:

  • வேர்ச்சைல்டு
  • பேர்ச்சைல்டு
  • வேர்ச்சைல்ட்
  • பேர்ச்சைல்ட்
  • ஃபேர்ச்சைல்டு
  • ஃபேர்ச்சைல்ட்

Fa என்பதற்கு ஃவ என பயன்படுத்தலாம் என்று சிலர் சொன்னதனாலேயே இவ்வாறு எழுதினேன். ஃப என்பதை ஏற்கும் பலரும் ஏன் ஃவ என்பதை ஏற்கத் தயங்குகிறார்கள் என்பது எனக்கு விளங்க வில்லை. இறுதியில் டு என்று முடியும் பொழுது இயல்பான குற்றிலுகர முடிவாலும், மெல்லொலி டகரமானதாலும் சற்றேனும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். பகரம் வருவதைக்காட்டிலும் வகரம் வருவது சாலப் பொருந்தும் என்பதும் என் கருத்து. Fair என்ற சொல்லை ஃபெயர் என்று சொன்னால் பொருந்தாது. ஃபேர் என்றாவது சொல்ல வேண்டும். ஒருவர் தவறிழைத்தால் எல்லோரும் அத்தவறுதனை பின்பற்ற வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஃபெயர் என்பது பிழையானது, தவறு என்று நான் கருதுகிறேன். மேலும் ச் (சகர ஒற்று) நான் கூடுதலாக இட்டிருப்பதாக பலரும் கருதக்கூடும். அதையும் விளக்குகிறேன். Fairchild என்பதில் ch என்பது வல்லினம் போலும் ஒலிப்பு தருவது, எனவே சொல்லிடையில் வருவதால், சகர ஒற்று இருந்தால்தான் சைல்டு என்பதில் உள்ள சை என்னும் எழுத்து வலித்து ஒலிக்கும். மொழியின் முறைகளை கூடிய மட்டிலும் பின் பற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். ஃபேர்சைல்ட் என்று எழுதினால் தமிழர்கள் Fairsaild என்று பலுக்கவேண்டும் (உச்சரிக்க வேண்டும்) (அதுவும் ஃபேர் என்பதை Fair என்று சொன்னால்). --C.R.Selvakumar 12:49, 19 ஜூலை 2006 (UTC)செல்வா

மேலும் ட் (டகர ஒற்று) ஒருபொழுதும் மெலிந்து ஒலிக்காது. எந்த வன்னின ஒற்றும் மெலிந்து ஒலிக்காது, உயிரேறிய வல்லினந்தான், தொகாப்பியர் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் வழக்கறிந்து கூறியவாறு, முறையுடனும், அழுங்குடனும் மெலிந்தும், வலித்தும் ஒலிக்கும். இறுதியில் வல்லின ஒற்று நின்றால் வலித்துத்தான் ஒலிக்க வேண்டும். சைல்ட் என்று எழுதினால் chilt என்றுதான் ஒலிக்க வேண்டும்.--C.R.Selvakumar 16:32, 19 ஜூலை 2006 (UTC)செல்வா

செல்வா, தங்கள் நீண்ட விளக்கத்துக்கு நன்றி.
  • ஃபேர்ச்சைல்டு

பொருத்தமாகவிருக்கும்.--Kanags 21:44, 19 ஜூலை 2006 (UTC)