பேச்சு:புவி நாள்
Appearance
பூமி என்பதை புவி என்று மாற்ற வேண்டுகிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 03:47, 22 ஏப்ரல் 2007 (UTC)
- ஏனோ பூமி நாள் என்பது பொருத்தம் இல்லாதது போல் தெரிகின்றது. செயற்கையான கூட்டுத் தொடராக படுகின்றது. புவி நாள் என்பதும் இத்தகைய நெருடலையே தருகின்றது. மண்ணுலக நாள் என்றால் earth என்பதன் அடிப்பொருள் (தாய்மண் என்னும் பொருள்) வருவது போல் உணர்கின்றேன். சற்று நீளமாக இருந்தாலும் பொருத்தமாக இருப்பதாக நினைக்கின்றேன். --செல்வா 04:08, 22 ஏப்ரல் 2007 (UTC)
புவி நாள் என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன். மண்ணுலகம் என்று சொல்லும் போது விண்ணுலகம் என்ற சமயச் சொல்லுடன் இணைத்து குழப்ப நேரிடுவது போல் தோன்றுகிறது.--ரவி 07:19, 22 ஏப்ரல் 2007 (UTC)
- பலரும் எப்படி விரும்புகிறார்களோ, அப்படியே இருக்கட்டம். பூமிநாள் என்பதைக் காட்டிலும் புவிநாள் என்பது செவிக்கு சற்று நெருடல் குறைவாக இருக்கின்றது ஆனால் மண்ணுலகம் என்றால் விண்ணுலகத்தோடு எப்படிக் குழம்பும், ரவி??!! இதில் எப்படிச் சமயம் புகும்?! மண்ணக நாள் எனலாம்.--செல்வா 15:13, 22 ஏப்ரல் 2007 (UTC)
மண் (அ+து, நிலம்), நீர் (கடல்) இவற்றுடன் மட்டும் நின்றுவிடாது அதனுடன் சேர்ந்த ஆகாயமும் சேர்ந்தது தான் புவி. எனவே தனியே மண்ணுலகு என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.--Kanags 10:09, 23 ஏப்ரல் 2007 (UTC)
- நீங்களும் ரவியும், ஒரு சொல்லுக்கு எப்படி பொருள் அமைகின்றது அல்லது ஒரு பொருளுக்கு எப்படிச் சொல் அமைகின்றது என்று சற்று எண்ணிப்பார்க்கவேண்டும். யானைக்குக் கரி என்றும் பெயர் உண்டு. கருப்பாக இருப்பது யானை மட்டுமல்ல,. கருப்பாய் இருப்பதுமட்டும் அதன் பண்புமல்ல - ஆனால் கரி என்னும் சொல் கரியநிறம் பற்றி ஏற்பட்டு யானையைக் குறிக்கும் சொல். மண்ணுலகம் என்பது மண், நீர், வளி அதில் அடங்கிய எல்லா செடி-கொடி-மரம்-புல் பூண்டு மற்ற உயிரினங்கள் கனிவளங்கள் என்ற அனைத்தும் அடங்கக் குறிக்கும் சொல்தான். தமிழ்ச்சொல்லாய் இருப்பதால் உங்களால் எண்ணி இப்படி ஒரு மறுமொழி தரவும் இயலுகின்றது!! புவி என்றால் மண், நீர், வளி என்று எப்படிப் பொருள் கொண்டீர்கள்?! ஆங்கிலத்தில் earth என்றாலும் மண்தான், அதுவும் நிலம், நீர், வளிமண்டலம் அனைத்தையும் குறிக்கும். நில உலகம், மண்ணுலகம் என்றாலும் அப்படித்தான் தரைநிலம், நீர், வளிமண்டலம் என்று அனைத்தையும் குறிக்கும். பூமி என்றாலோ, புவி என்றாலோ புவனம் என்றாலோ அவையும் மண்ணைத்தான் கூறிக்கும் -வடமொழி அறிவில்லாமல் பொதுமக்கள் (இது உங்களைக்குறித்து அல்ல!) சிந்தித்துப் பொருள் சொல்ல இயலாது (bhu - earth, soil). இதன் அடிப்படையில் தரைநிலம், நீர், வளிமண்டலம் ஆகிய அனைத்தையும் குறிக்கும். பொருள் கொள்ளும் முறைமை அல்லது பொருள் ஏற்கும் மரபால் இவை பெறப்படும். சொற்பொருளியல் அல்லது சொற்பொருளேன்மை (semantic system) முறைப்படியே சொற்கள் பொருள் கொள்ளுகின்றன (அல்லது பொருளுக்குச் சொற்கள் சூட்டப்படுகின்றன - சில காலப்போக்கில் மாறியும் திரிந்தும், எதிர்மறைப்பொருளும் கொள்ளவல்லன). எனவே நிலம் என்றாலும் நில உலகம் என்றாலும், மண்ணுலகம், மண்ணகம் என்றாலும் தரைநிலம், நீர், வளிமண்டலம் ஆகிய அனைத்தையும் கட்டாயம் சுட்டும். உங்களுக்கு எந்தச் சொல் இருந்தால் சரியென்று படுகின்றதோ அதனையே எடுத்தாளுங்கள், ஆனால் என் பரிந்துரைக்குப் பல காரணங்கள் உள்ளன: (1) நீங்கள் சிந்தித்து மறுக்கத்தூண்டும் அளவும் உயிர்ப்புடன் இருப்பது (2) தமிழ்மொழியை பலவாறு இழிவுபடுத்தி, கீழ்மைப்படுத்தி எழுதி தமிழரின் உண்மையான வரலாற்றை மறைத்தும் மாசுபடுத்தியும் வருவோரை அறிந்திருத்தல்- (எ.கா. ஆங்கில விக்கியில் தமிழ்மொழிக் கட்டுரை சிறப்புக்கட்டுரைத் தகுதியில் இருந்து நீக்கவேண்டும் என்னும் உரையாடலைப் பாருங்கள். முன்னர் நீலகண்ட சாஸ்திரி, சுவாமிநாதர் (உ.வேசா அல்ல) முதலியோர் தமிழ் மொழியைக் கீழ்மைப்படுத்தி எழுதினர். இன்று Herman Tieken என்னும் டச்சுப் பேராசிரியர் (இவர் தமிழ் இலக்கியம் அனைத்தும் கி.பி. 8-9 ஆவது நூற்றாண்டினது என்றும் எல்லாம் ஒருசிலரால் பொய்யாக உருவாக்கப்படது என்றும் ஒரு சிறிதும் பொருந்தாது கூறியிருக்கிறார் - எல்லாம் வடமொழியைப் பின்பற்றி உருவானது என்றும் கூறியுள்ளார் - இதனைக் கன்னடப் பயனர் சர்வஞ்ஞா முதலானோர் எப்படிக் கையாளுகின்றனர் என்றும் அறிதல் வேண்டும்). இத்தனை நீளமாக நான் எழுதுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. தமிழர்கள் தமிழ்மொழியைப் போற்றவில்லை என்றால் வரும் கேடுகள் பல. மேலும் விரிக்க விரும்பவில்லை. --செல்வா 13:23, 23 ஏப்ரல் 2007 (UTC)
கூகுள் மொழிபெயர்ப்புக் குறியை நீக்கிட பரிந்துரை
[தொகு]இக்கட்டுரை போதிய அளவு திருத்தப்பட்டு விட்டது. எனவே, கூகுள் மொழிபெயர்ப்புக் குறியை நீக்கிட பரிந்துரைக்கிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 04:28, 23 ஏப்ரல் 2012 (UTC)