பேச்சு:புனித எலன்சு மலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பு செயின்ட் ஹெலன்சு மலை என்று இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏன் செயின்ட் என்பது சென் என்று எழுதியுள்ளது என்று விளங்கவில்லை. செய்ன்ட் அல்லது செயின்ட் என்றுதானே கூறுவார்கள்? மேலும் ஹெலன்ஸ் என்பதற்கு மாறாக எலன்சு என்றும் எழுதலாம். செயின்ட் எலன்சு மலை என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சொல்லுவதற்கும் சற்று எளிமையாக இருக்கும்.(அதாவது டகர ஒற்றில் முடிந்து எகர உயிரில் தொடங்குவது, ஒலிப்பதற்கு இலகுவாக இருக்கும்) --செல்வா 15:11, 17 மே 2008 (UTC)[பதிலளி]

பேச்சு வழக்கில் தமிழ்நாட்டில் சென் என்பார்கள். (நான் படித்த பள்ளி சென் சேம்சு பள்ளி) தமிழில் தான் saint என்பதை தூய, புனித, புனிதர் என்று வழக்கம் உள்ளதே (எ.கா - புனித சார்ச்சு கோட்டை, தூய வளனார் கல்லூரி). அது போல் புனித எலன்சு மலை அல்லது தூய எலன்சு மலை என்றே எழுதலாம்--ரவி 16:31, 17 மே 2008 (UTC)[பதிலளி]

தூய அல்லது புனித என்று எழுதலாம் என்றே நானும் நினைக்கிறேன். சென் என்று நான் கேட்டதில்லை!! தகவலுக்கு நன்றி!--செல்வா 16:49, 17 மே 2008 (UTC)[பதிலளி]

இலங்கையில் saint என்பதற்கு சென் என்றே புழக்கத்தில் உள்ளது. பேச்சுவாழக்கில் மட்டுமல்ல, எழுத்திலும் கூட. செயின்ட் என்று எழுதுவதில்லை. சென் செபஸ்தியன் என்றெழுதூவார்கள். அப்படியே சென் ஹெலன்ஸ் என்று எழுதினேன். புனித எலன்சு மலை என்றே மாற்றி விடுகிறேன்.--Kanags \பேச்சு 22:19, 17 மே 2008 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புனித_எலன்சு_மலை&oldid=241937" இலிருந்து மீள்விக்கப்பட்டது