பேச்சு:புஞ்சைப் புளியம்பட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இத்தலைப்பிலான கட்டுரை ஏற்கனவே பொன்செய் புளியம்பட்டி எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது. அந்தக்கட்டுரையுடன் சேர்க்கப் பரிந்துரைக்கப்படுகிறது.--Theni.M.Subramani 15:47, 18 மார்ச் 2010 (UTC)

It has a weekly Sandy (Market), which is the second place in Tamilnadu. Its area is 12.75 Acres, which is running from this Sandy, and Annual Income is 23.75 Lakhs for the Municipality. என்று புஞ்சை புளியம்பட்டி நகராட்சி தளத்தில் உள்ளது. It is also known for its second big weekly shandy in Tamilnadu, functioning on Sundays and Thursdays... என்று தேனி-அல்லிநகரம் நகராட்சி தளத்தில் உள்ளது. எதை எடுத்துக்கொள்வது? --குறும்பன் 14:32, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]

இப்படி வருவதைத் தகவலாக வெளியிடாமல் கூற்றாக வெளியிடுவது மரபு “X சொல்கிறார் அவர் இரண்டாவது பெரிய Y என்று” என்று சொல்பவரின் கூற்றாக மாற்றிக் கூறி விடலாம். எ.கா. ”புஞ்சை புளியம்பட்டி நகராட்சி, தங்கள் நகரத்தின் வாரச் சந்தையே தமிழ் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளதாகக் கூறியுள்ளது” என்று இடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 15:11, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]
  • எனக்குத் தெரிந்த அளவில் தேனி வாரச்சந்தை பொள்ளாச்சிக்கு அடுத்ததாக இரண்டாமிடத்தில் இருக்கிறது. கேரளாவின் இடுக்கி மாவட்டம், தற்போதைய தேனி மாவட்டம் என இரு மாவட்டத்தினருக்கும் பயனளிக்கும் சந்தை தேனி வாரச்சந்தைதான். தேனி வாரச்சந்தை நடவடிக்கைகளால் தேனி நகருக்கு அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தவிர பிற வணிகத் தொழில் நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை வேலைநாளாக இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் தேனி நகர் மிகவும் பரபரப்பாகவும், நெரிசலாகவும் இயங்கிக் கொண்டிருக்கும். இந்நிறுவனங்கள் புதன் கிழமை வார விடுமுறையாக வைத்துக் கொண்டுள்ளன. தேனி சந்தையில் கிடைக்காத பொருட்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பல பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கும். இங்கு மழைக்காலத்தில் ஈசல் கூட படிகளில் அளந்து விற்பனை செய்யப்படும். (தேனியிலும் சுற்றுப் பகுதியிலும் ஈசலை வறுத்துச் சாப்பிடும் வழக்கம் பல சாதியினரிடம் உள்ளது.) --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:27, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]
இங்கு சிக்கல் இரு அதிகாரப்பூர்வ தளங்கள் தாங்கள் இரண்டாவது என்று சொல்லிக் கொள்வதால் தான் :-) . இரண்டும் அரசு தளங்கள், வேறு வலுவான புற ஆதாரங்கள் இல்லாத போது இப்படி “அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்று சொல்லி இருவர் சொல்வதையும் வெளியிட வேண்டிய நிலை.--சோடாபாட்டில்உரையாடுக 15:39, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]

ஈசலை வறுத்துச் சாப்பிடும் பழக்கம் புதுக்கோட்டை வட்டாரத்திலும் உள்ளது :)--இரவி 18:06, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]