தேனி - அல்லிநகரம் வாரச்சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குச் சொந்தமான தேனி - அல்லிநகரம் வாரச்சந்தை தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வாரச்சந்தை என்று தேனி - அல்லிநகரம் நகராட்சி இணைய தளம் கூறுகிறது. இந்த வாரச்சந்தையில் காய்கறிகள், பழங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடு, மாடு, கோழி விற்பனை என்று இந்த வாரச்சந்தையில் அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். இந்த வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. இந்த சந்தை வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. தேனி மாவட்டத்திலிருக்கும் பிற ஊர்களிலிலிருந்தும், அருகிலுள்ள திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலிருந்தும் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டப் பகுதிகளிலிருந்தும் வணிகர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் தேனி நகரில் அரசு நிர்வாக அமைப்புகள் தவிர வணிக நிறுவனங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமையை வேலை நாளாகவும், புதன்கிழமையைப் பொது வார விடுமுறை நாளாகவும் கொண்டுள்ளன.