பேச்சு:பிரிட்டன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

Britain என்பதை "ஐக்கிய இராச்சியம்" என்று கூறுவதில்லை. ஐக்கிய இராச்சியம் (UK) என்பது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லந்து மற்றும் வட அயர்லாந்து போன்ற நான்கும் இணைந்ததன் பின்னர் வழங்கப்படும் பெயராகும்.

அதேவேளை "Britain" என்பது பிரித்தானியா தீவை மட்டுமே குறிக்கும். அதாவது அரசியல் ரீதியாக பிரித்தானியா தீவுக்குள் அடங்கியிருக்கும் வேல்ஸ், ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து மூன்று நாடுகளின் நிலப்பரப்பைக் குறிக்கும் பெயராகும். உரோமர்கள் கெல்டிக் பூர்வக்குடிகளுடன் போரிட்டு அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பைக் கைபற்றியதன் பின்னர், அவர்கள் அத்தீவுக்கு வழங்கியப் பெயர் "Brittania" என்பதாகும். அப்பெயரே அதன் பின்னர் மருவி "Britain" என வழங்கப்பட்டது. Brittania வில் வாழ்ந்த பூர்வக்குடிகளை உரோமர், "Briton" என்றும் அழைத்தனர்.

  • Briton = பிரிட்டனியர் (பிரித்தானியாவில் வாழ்ந்த பூர்வக்குடிகளின் பெயர்)
  • Britain = பிரித்தானியா (நிலப்பரப்பின் பெயர் அல்லது தீவின் பெயர்)

எனவே மேலுள்ளவாறு அமைதலே பொருத்தமானது என கருதுகிறேன். --HK Arun 06:18, 17 பெப்ரவரி 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிரிட்டன்&oldid=1121307" இலிருந்து மீள்விக்கப்பட்டது