பேச்சு:பியோதர் தஸ்தயெவ்ஸ்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியோதர் தஸ்தயெவ்ஸ்கி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

If you are interested in many of Dostoevsky further information, you may well help this site: http://dostojewski.npage.de/

கேள்வி: இந்த பக்கத்தினை தொகுக்க விரும்பினேன். எழுத ஆரம்பிக்குமுன் இது வரையிலான கட்டுரை 'வரலாற்றை' எடுத்து பார்த்தேன். நூறுக்கும் மேற்பட்ட தொகுப்புகள் நடந்திருக்கிறது. ஆனால் கட்டுரை அளவில் மிகச் சிறியதாகவும், ஒரே ஒரு மேற்கோளுடன் மட்டும் இருக்கிறது. பெரும்பாலும் "bot"களாக தெரிகின்றன. என்னால் இந்த bot கொள்கையை சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்தப் பக்கம் இன்னும் நிறைய தகவல்களுடனும் ஆதாரங்களுடனும் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். இப்போது இதை தொகுத்தால் மீண்டும் இது சிறிதாகி விடுமா? நான் புதியவன்.முன்னோடிகள் உதவ வேண்டுகிறேன்! --Srini94 (பேச்சு) 23:15, 11 பெப்ரவரி 2017 (UTC)

உங்களால் முடிந்தால் இக்கட்டுரையை விரிவு படுத்துங்கள். ஒரு காலத்தில் விக்கித்தரவு இருக்கவில்லை. வேற்று மொழி இணைப்புகளை இந்த BOT களே நடத்தி வந்தன. வேற்று மொழி இணைப்புகள் இப்போது நீக்கப்பட்டு விட்டதால் கட்டுரையின் அளவும் குறைந்து விட்டது. நீங்கள் விரிவு படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 23:32, 11 பெப்ரவரி 2017 (UTC)

நன்றி. ஆனால் மீண்டும் ஒரு குழப்பம். விக்கியில் எந்த ஒரு கட்டுரைக்கும் எந்த மொழியிலிருந்தும் மேற்கோள்கள் தரவுகள் இருக்கலாம் தானே. விக்கியில் ஒரு மொழிக்கு அதே மொழியில்தான் இருக்க வேண்டும் என்று அவசியமென்று இல்லையே? இப்போது நான் பரவலாக கிடைக்கும் வேற்று மொழி அறிஞர்களின் முதன்மைச் சான்றுகளை தந்தால் அது இந்த Botகளால் நீக்கப்படுமா? இல்லை நான் சொல்வது இல்லாமல் இந்த கட்டுரையின் பிரச்சினை வேறா? - --Srini94 (பேச்சு) 01:11, 12 பெப்ரவரி 2017 (UTC)

நீங்கள் மேற்கோள்களையும், வெளி இணைப்புகளையும், விக்கி மொழி இணைப்புகளையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள் போல் தெரிகிறது. ஒரு கட்டுரை விக்கியின் வேறு ஒரு மொழியிலும் இருந்தால் அது முன்னர் BOT எனப்படும் தானியங்கிகளால் விக்கியிடை இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இப்போது அவை நீக்கப்பட்டு, விக்கித்தரவில் இணைக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையின் இடது பக்கத்தில் கீழே உள்ள பிறமொழி இணைப்புகளைப் பாருங்கள். ஆங்கிலம் உட்பட மொத்தம் 145 பிறமொழி விக்கிப்பீடியாக்களில் தமிழ்க் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுரை ஒன்றைத் தொடங்கும் போது, அக்கட்டுரை ஆங்கில விக்கியில் இருந்தால், கட்டுரை தொடங்குபவரே அதனை விக்கித்தரவில் இணைக்க வேண்டும். கட்டுரையில் உள்ள மேற்கோள்கள், வெளி இணைப்புகள் தமிழ், அல்லது ஆங்கிலத்தில் (தமிழருக்கு அது இரண்டாம் மொழி) இருக்கலாம். அவசியமானால் வேறு மொழிகளிலும் இருக்கலாம். எனவே நீங்கள் கவலைப் படாமல் மேற்கோள்களுடன் கட்டுரையை விரிவுபடுத்துங்கள்.--Kanags \உரையாடுக 01:55, 12 பெப்ரவரி 2017 (UTC)
Srini94, கட்டுரை விரிவாக்கும் போது அதற்குரிய மேற்கோள்களையும் தாருங்கள். மேற்கோள்கள் இல்லாத பகுதிகள் பின்னர் நீக்கப்படலாம்.--Kanags \உரையாடுக 02:03, 12 பெப்ரவரி 2017 (UTC)

விரிவான பதிலுக்கு நன்றி. மேற்கோள்கள் இல்லாத பகுதிகள் நீக்கப்படுமெனத் தெரியும். வலுவான மேற்கோள்கள் சேகரித்து தருகிறேன்.எழுதி சேர்க்க சேர்க்க புரிந்துகொள்வேன் என நினைக்கிறேன். --Srini94 (பேச்சு) 02:18, 12 பெப்ரவரி 2017 (UTC)


இப்போதுதான் விக்கி மொழியாக்கம் https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translate_us, பற்றிய பக்கத்தை பார்த்தேன். அதில் Edit Summaryயில் குறிப்பு தர சொல்லியிருந்தார்கள். இப்போது நான் தொகுத்திருக்கும் இந்த பக்கத்தின் அண்மைய தொகுப்புகள் ஆங்கில wiki https://en.wikipedia.org/wiki/Fyodor_Dostoyevsky பக்கத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை. அங்கிருந்து எடுக்கப்பட்ட தகவல்களில்தான் பக்கம் விரிவடைந்துள்ளது. ஆதாரங்களும் அங்கிருந்தே. கால்வாசி கட்டுரைதான் இதுவரை மொழியாக்கம் செய்திருக்கிறேன். நான் இதுவரை குறிப்பு எதுவும் தரவில்லை. ஆதலால் இதை மூலத்தில் (Eng) எழுதியவர்களின் விவரங்களுக்கு ஆங்கில wiki கட்டுரையின் வரலாற்றை காண்க. இனிமேல் செய்யப்படும் தொகுப்புகளுக்கு முறையான Attributeகள் அளிக்கப்படும். இது இனிமேல் தொகுப்பவர்களுக்காக. நன்றி. --Srini94 (பேச்சு) 21:03, 13 பெப்ரவரி 2017 (UTC)