பேச்சு:பாலகிருஷ்ண ரெட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர்:Neechalkaran கட்டுரையின் பெயரை பாலகிருஷ்ணா ரெட்டி என்பதிலிருந்து பாலகிருஷ்ண ரெட்டி என்று மாற்றியுள்ளீர்கள். தமிழ் ஊடகங்கள் அவர் பெயரை அவ்வாறுதான் குறிப்பிடுகின்றன என்பதினால் அவ்வாறு நீங்கள் மாற்றியிருக்கலாம். ஆனால் அவர் அவரது பெயரை பாலகிருஷ்ணா ரெட்டி என்றுதான் அவர் உட்பட ஒசூர் பகுதியினயில் குறிப்பிடுகின்றனர். பாலகிருஷ்ணா ரெட்டி என்பதே அவர் பயன்படுத்தும் பெயர். அதனால் இந்தப்பெயர் வழிமாற்றக இருக்கட்டும் வழிமாற்றை யாரும் நீக்கவேண்டாம் என கோருகிறேன்.--அருளரசன் (பேச்சு) 16:09, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Arularasan. G: சில அரசு ஆவணங்களில் அவ்வாறு கண்டேன். பாலகிருஷ்ணா என்பதே அதிகாரப்பூர்வப் பெயரென்றால் மீளமைத்ததற்கு வருந்துகிறேன். "ணா" என்றே மாற்றுங்கள்-நீச்சல்காரன் (பேச்சு) 16:22, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

இதில் வருத்தம் தெரிவிக்க ஏதுமில்லை. இவர் தன் பெயரை தெலுங்கு வழக்கில் குறிப்பிட்டுவருவதால் அரசு ஆவணங்கள், ஊடகங்கள் போன்றவற்றில் நமக்கு அறிமுகமாக பேச்சுவழக்கில் குறிப்பிடுவதால் ஏற்படும் சிக்கல்தான் காரணம்.--அருளரசன் (பேச்சு) 16:32, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]