பேச்சு:பார்டன் ஊசல்களின் அமைப்பு
Booradleyp1 இக் கட்டுரையைப் பற்றி தங்களின் ஆலோசனைகளை எதிர்நோக்கியுள்ளேன்--மணிவண்ணன் (பேச்சு) 03:19, 13 சூலை 2017 (UTC)
@TNSE MANI VNR: இக்கட்டுரையில் நான் செய்துள்ள மாற்றங்களை இங்கு சொடுக்கிப் பார்க்கலாம்.
- கட்டுரையின் கருத்துக்களை அவ்வளவாக மாற்றவில்லை. யூடியூப் இணைப்பைப் பார்த்து சிறிதளவே மாற்றினேன்.
- பெரும்பான்மையான மாற்றம் விக்கிநடைக்கு ஏற்ப செய்யப்பட்டவை:
- உள்ளிணைப்புகள் கட்டுரையில் ஏதேனும் ஒரு இடத்தில் இருந்தால் மட்டுமே போதுமானது. எடுத்துக்காட்டாக, ”ஊசல்” என்று எல்லா இடங்களிலும் இருக்க வேண்டியதில்லை; ஒரு இடத்தில் மட்டும் இணைப்புத் தந்து விட்டு மற்ற இடங்களில் ”ஊசல்” என்று மட்டும் தந்தால் போதுமானது.
கட்டுரைக்குக் கண்டிப்பாக ஒரு தலைப்பு பத்தி (leading paragraph) வேண்டும். அதனால் ”வரலாறு” என நீங்கள் தந்திருந்த துணைத் தலைப்பை நீக்கி தலைப்புப் பத்தியாக மாற்றியுள்ளேன்.
எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. நான் வெளியிணைப்புகளில் இணைத்துள்ள இணையப் பக்கத்தில் இயக்க ஊசலுடன் சமநீளம் கொண்ட ஊசல் (c) அதிக வீச்சுடன் அலைவுறும் என்றுள்ளது. நீங்கள் கட்டுரையில் \\ஒத்திசைவு அதிர்வெண் என்பது ஊசல்களின் நிறை, புவியீர்ப்பு முடுக்கம் மற்றும் ஊசல்கள் தொங்கவிடப்பட்ட கம்பியின் நீளம் ஆகியவற்றைப் பொறுத்தது.\\ என எழுதியுள்ளீர்கள். ஆங்கு நீளம் மட்டுமே காரணியாகத் தரப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. எனது துறை இயற்பியல் அல்ல என்பதால் என்னால் சரியான வகையில் விளங்கிக்கொள்ள இயலவில்லையோ என்றும் தோன்றுகிறது. --Booradleyp1 (பேச்சு) 04:42, 13 சூலை 2017 (UTC)
Booradleyp1 நீங்கள் கூறியுள்ள மாற்றங்களை இனி வரும் கட்டுரைகளில் கட்டாயம் கடைப்பிடிக்கிறேன்.தொடர்ந்து தாங்கள் வழிகாட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
\\ஒத்திசைவு அதிர்வெண் என்பது ஊசல்களின் நிறை, புவியீர்ப்பு முடுக்கம் மற்றும் ஊசல்கள் தொங்கவிடப்பட்ட கம்பியின் நீளம் ஆகியவற்றைப் பொறுத்தது.\\... இது பொதுவான வரையறை
இயக்க ஊசலுடன் சமநீளம் கொண்ட ஊசல் (c) அதிக வீச்சுடன் அலைவுறும்....இதில் நிறையும், புவியீர்ப்பு முடுக்கமும் சமமாக உள்ளதாகக் கொள்ள வேண்டும்.நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 06:46, 13 சூலை 2017 (UTC)
@TNSE MANI VNR: புவியீர்ப்பு முடுக்கம் சமமெனக் கொள்ளலாம். ஆனால், \\மொத்த ஊசல்களின் அமைப்பையும் இயக்க வேண்டியுள்ளதால் இயக்கும் ஊசல் மட்டும் கனமானதாக இருக்கும்.\\ எனவே நிறை சமம் என எவ்வாறு கொள்ள இயலும்?--Booradleyp1 (பேச்சு) 06:52, 13 சூலை 2017 (UTC)
Booradleyp1தங்களின் சந்தேகம் சரி.ஆனால்,இந்த கட்டுரையில் மட்டும் கம்பி+குண்டின் நிறையை கணக்கில் கொள்ள வேண்டும்..நன்றி...--மணிவண்ணன் (பேச்சு) 07:08, 13 சூலை 2017 (UTC)
Booradleyp1 மாற்றம் செய்துள்ளேன்..நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 07:24, 13 சூலை 2017 (UTC)