பேச்சு:பாக்கித்தான் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

test cricket என்பது இரு அணிகளின் ஆடுதிறனுக்கு வைக்கப்படும் test என்று ஆங்கில விக்கிக் கட்டுரை சொல்கிறது. பார்க்க - en:Test cricket. இதை ஒட்டித் தமிழில் நாமும் தேர்வுத் துடுப்பாட்டம் என்று சொன்னால் என்ன? டெஸ்ட் என்று எழுதுவதா ரெஸ்ற் என்று எழுதுவதா என்பன போன்ற குழப்பங்களை நீக்குவதுடன் நல்ல தமிழாகவும் இருக்கும். ஒரு நாள் போட்டிகள் என்று தமிழில் சொல்வது போல் தேர்வுப் போட்டி என்றே சொல்லலாம் தானே?--ரவி 09:49, 18 மார்ச் 2007 (UTC)

நன்று. வழக்கத்தில் பிற தமிழ்ச் சொற்கள் உண்டா...--Natkeeran 13:19, 18 மார்ச் 2007 (UTC)

வழக்கத்தில் தமிழ்ச் சொல் ஏதும் இல்லை. ஆனால், நாம் தாராளமாக தேர்வுத் துடுப்பாட்டம் எனலாம். கிரிக்கெட்டே துடுப்பாட்டமாகிவிட்ட பிறகு டெஸ்ட் அவசியமில்லை தானே?--ரவி 15:48, 18 மார்ச் 2007 (UTC)

ஆம், வழக்கத்தில் வேறு சொற்கள் இல்லை. தேர்வுத் துடுப்பாட்டம் என்பது பொருத்தமானது. நன்றி. --கோபி 15:56, 18 மார்ச் 2007 (UTC)