பேச்சு:பயிர்ச்சுழற்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றம்[தொகு]

பயிர் சுழற்சி, பயிர்ச் சுழற்சி, இவற்றில் எது சரி?--கலை (பேச்சு) 22:03, 4 பெப்ரவரி 2021 (UTC)

பயிர்களின் சுழற்சி என்பதால், பயிர்ச்சுழற்சி என்று வரவேண்டும். சொல்லுவதற்குச் சற்று கடினமாக இருக்கலாம், ஆனால் இலக்கணப்படி ஒற்று மிகவேண்டும்--செல்வா (பேச்சு) 12:17, 5 பெப்ரவரி 2021 (UTC)

பயிற்சுழற்சி என்பது தான் அகராதியில் காணப்படுகிறது.--Seetha VB
பயிர்ச்சுழற்சி சரியானதே.--Kanags \உரையாடுக 23:18, 5 பெப்ரவரி 2021 (UTC)
@Seetha VB: பயிர் என்ற சொல் இன்னொரு சுழற்சி என்ற சொல்லுடன் இணையும்போது பயிர்ச்சுழற்சி என்றே வரும். பயில் என்ற சொல்லானது லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி விதியின்படி, இன்னொரு சொல்லுடன் இணைகையில், 'பயிற்' என்று வரலாம். ஆனால் பயிர் என்பதில் அந்த மாற்றம் வராது. எனவே பயிர்ச்சுழற்சி என்பதே சரி. பயிற்சுழற்சி என்பது தவறானது.--கலை (பேச்சு) 18:46, 9 பெப்ரவரி 2021 (UTC)

உங்கள் விளக்கத்திற்கு நன்றி கலை-- சீதா (பேச்சு) 17:19, 10 பெப்ரவரி 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பயிர்ச்சுழற்சி&oldid=3104562" இலிருந்து மீள்விக்கப்பட்டது