உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பயர் பாக்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled

[தொகு]

ஃபயர் பாக்ஸ் (Firefox) என்று தலைப்பை மாற்றம் செய்யலாமே? ---மு.மயூரன் 16:48, 19 ஜூலை 2006 (UTC)

Phoenix என்பதற்கு பொனிக்ஸ் என்பது தவறான ஒலிப்பு. Feenix என்பது போல ஒலிக்க வேண்டும். எனவே ஃவீனிக்ஸ் என்று எழுதலாம், அல்லது வீனிக்ஸ் என்று எழுதலாம். ஃபீனிக்ஸ் என்பதைத் தவிர்க்கலாம் (ஆனால் இங்கெ Ph என்று வருவதால் ஒரு முறைப்படி ஃபீனிக்ஸ் என்றும் சொல்லலாம்.). Fa என்பதை ஃவ என்றும் Pha என்பதை ஃப என்றும் எழுத்துப்பெயர்க்கலாம். ஆனால் தமிழ் ஒலிப்பாங்குடைய மொழியாகையால், ஒலியைத்தான் பெயர்க்க வேண்டும். எனினும் ஓரளவிற்கு முதல் மொழியின் எழுத்துக்கூடல்களை (அதிக ஒலித்திரிபு இல்லையெனில்) இயலும் இடத்தில் ஒத்து வருதல் நலம். --C.R.Selvakumar 17:18, 19 ஜூலை 2006 (UTC)செல்வா

உமாபதி, பட்த்தின் அளவை 500px ல் இருந்து 200px க்கும் மாற்றியவுடன், ஒரளவு சீராகியுள்ளது. தொகு என்னும் சொடுக்குச் சொற்கள் பலமுறை வருவதற்கு ஒரு வரி பத்திகள்தான் கரணியம் (காரணம்) என்று எண்ணுகிறேன். அல்லது வலப்புறத்திலே உள்ள படங்களுக்கு இடையே அதிக இடைவெளி இல்லாமல் பத்திகள் வருவதாலும் இருக்கலாம். எனக்கு இவைகளைச் சரி செய்வதில் எவ்வித சிறப்பறிவும் இல்லை. ரவி, சுந்தர், மயூரநாதன், நற்கீரன், கனகு போன்றோர் உதவக்கூடும். --C.R.Selvakumar 21:42, 13 அக்டோபர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

நன்றி செல்வா,
விக்கிபீடியர்களே, வார்புருக்களைப் பயனபடுத்தும்போதும் சிலசமயம் எழுத்துக்கள் உடைந்தவண்ணம் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக {{betasoftware}} இவற்றிற்கு ஏதேனும் தீர்வுண்டா? தெரிந்தவர்கள் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.--Umapathy 16:22, 15 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பயர்_பாக்சு&oldid=3477704" இலிருந்து மீள்விக்கப்பட்டது