பேச்சு:பசும்பூண் பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம். தொகுப்புக்குப் பாராட்டுகள். கட்டுரை தெளிவாக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 23:10, 8 மே 2013 (UTC)

தங்கள் பாராட்டுக்கள் எல்லாம் மயிலையாருக்கும் வ. குருநாதருக்கும் போய் சேரட்டும். விக்கிப்பீடியாவில் பல ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளையும் காட்டி ஆக வேண்டும் என்ற நோக்கில் இது பதியப்பட்டது.

//ஆதன் தந்தை ஆந்தை என்றும், பூதன் தந்தை பூந்தை என்றும் வருவது போல அருவந்தை என்னும் பெயரும் அருவன் தந்தை என அமைந்த பெயராகும்.//

மேலே நீங்கள் அருவந்தை கட்டுரையில் சேர்த்த உள்ளடக்கங்களே, எனக்கு இக்கட்டுரையில் சேர்த்த உள்ளடக்கத்துக்கும் நீங்கள் வெகுவாக பாராட்டிய மற்ற கட்டுரைகளுக்கும் முன் உதாரணம். அதனால் உங்களுக்கு நீங்களே பாராட்டுக்களை சொல்லிக் கொள்ளுங்கள். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:00, 9 மே 2013 (UTC)

மேலும் en:Chanakya#Identitification with Kautilya or Vishnugupta பாருங்கள். பல இடங்களில் இதை போன்ற உள்ளடக்கங்கள் சேர்க்கப்படுவது வழக்கில் உள்ளதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:04, 9 மே 2013 (UTC)

  • அன்புள்ள தென்காசியாருக்கு. பார்த்தேன். எதை எங்கு வேண்டுமானாலும் சேர்க்கலாம். தெளிவு வேண்டும். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 18:18, 9 மே 2013 (UTC)

தனிக்கட்டுரை[தொகு]

பசும்பூண் பாண்டியனும், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனும் ஒருவர் என்பது ஒரு ஒப்புநோக்கக் கருத்து. முடிந்த முடிபு அன்று. எனவே இது தனிக்கட்டுரையாகவே இருப்பது நலம். --Sengai Podhuvan (பேச்சு) 20:50, 20 சனவரி 2015 (UTC)