உள்ளடக்கத்துக்குச் செல்

அருவந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிசில் கிழார் கல்லாடனார் என்னும் சங்க காலப் புலவர் அம்பர் கிழான் அருவந்தை வள்ளலைக்[1] கண்டு பாடினார். அவன் புலவரின் பசியையும் வறுமையையும் போக்கியதோடு புலவர்க்குப் புத்தாடை போர்த்தியும் பெருமைப்படுத்தினான். புறம் 385[2] கல்லாடனார் வாழ்ந்த கல்லாடம் திருவேங்கட மலைக்கு வடபால் இருந்த ஓர் ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதன் தந்தை ஆந்தை என்றும், பூதன் தந்தை பூந்தை என்றும் வருவது போல அருவந்தை என்னும் பெயரும் அருவன் தந்தை என அமைந்த பெயராகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. கா., கோவிந்தன் (1954). சங்க கால அரசர் வரிசை. அகுதை முதலிய ௪௪ பேர்கள் (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 20-21.
  2. https://www.tamilvu.org/ta/library-l1280-html-l1280307-126879
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவந்தை&oldid=4123180" இலிருந்து மீள்விக்கப்பட்டது