பேச்சு:நிலையான வைப்புத் தொகை (இந்தியா)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பக்கத் தலைப்பு பற்றிய பேச்சு[தொகு]

இந்தப் பக்கம் அதன் ஆங்கிலப் பதிப்பிற்கு ஏற்ப மேலும் விரிவான தகவலுடன் புதுப்பிக்கப்படுகிறது. தற்போதைய தலைப்பு இந்த பக்கத்தின் உள்ளடக்கத்தை சரியாக பிரதிபலிப்பதாக தெரியவில்லை என்பதால் தலைப்பை மேலும் பொருள்பட மாற்றுவதற்க்கு பிற பயனர்களின் யோசனைகளை வரவேற்கிறேன்.

நிரந்தர வைப்புத் தொகை என்பதை நிலையான வைப்புத் தொகை என மாற்ற நினைக்கிறேன். ஏனென்றால், வங்கிகளில் இத்தகைய கணக்குகளில் முதலீடு செய்யப்படும் போது முதலீட்டுக்கான காலவரை குறிப்பிடப்பட வேண்டியுள்ளது. ஆகவே, நிரந்தரம் என்ற சொல் சரியானதாக படவில்லை. நிலையானது என்ற சொல்லும் மிகப் பொருத்தமான சொல் என்று சொல்வதற்கில்லை. ஆயினும் இப்பக்கம் இதே விஷயத்தை பற்றிய ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு என்பதாலும், ஆங்கிலப் பக்கத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கும் Fixed Deposit என்ற வார்த்தைக்கு மிக அருகிலுள்ள தமிழ் வார்த்தையாக இருக்க வேண்டிய நிர்பந்தத்தாலும், நமது நாட்டில் இத்தகைய வைப்பு கணக்குக்கு சாதாரண மக்களிடையே பயன்பாட்டில் உள்ள வார்த்தை இது என்பதாலும் நிலையானது என்ற சொல் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

பிற பயனர்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பின் தயவு செய்து இப்பக்கத்தில் தெரிவிக்கவும். பக்கத்தின் தலைப்பை கடைசியாக மாற்றலாம் என்று கருதுகிறேன்.

ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 16:30, 15 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தக்கதொரு கட்டுரையை விரிவுபடுத்த முனைந்ததற்கு நன்றி. உங்களின் கருத்தின்படி, விரிவாக்கம் நிறைவடைந்த பிறகு, மிகப் பொருத்தமான தலைப்பிற்கு நகர்த்துவோம். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:44, 15 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

கட்டுரையை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து, அவ்வப்பொழுது குறிப்புகளை சேர்த்து, தற்போதைய மாற்றங்களை கணக்கிலெடுத்து எழுதிவரும் போது தலைப்பு பொதுவாக நிலையான வைப்புத் தொகை பற்றியதென்றாலும், உள்ளடக்கம் பெரும்பாலும் இந்தியாவை மையமாக வைத்தே எழுதப்பட்டுள்ளது என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது. ஆகவே, இப்பக்கத்துக்கு பொருத்தமான தலைப்பு "இந்தியாவில் நிலையான வைப்புத் தொகை" என்றிருக்க வேண்டும் எனத்தோன்றுகிறது. இதன் மீதும் பிற பயனர்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளது.
ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 16:49, 16 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

@Sree1959: வணக்கம். உங்களின் கருத்தினை ஏற்கிறேன். தலைப்பை நகர்த்தியிருக்கிறேன். ஆங்கிலக் கட்டுரையுடனான இணைப்பு இப்போது இருக்காது. இந்தியாவிலுள்ள நிலையான வைப்புத் தொகை நடைமுறையைப் பற்றி விளக்கும் கட்டுரையாக இக்கட்டுரையை மேம்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:25, 12 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி ஐயா, இப்பொழுது தான் இக்கட்டுரையில் உள்ள பெரும்பாலான விஷயங்களை உள்ளடக்கிய தலைப்பு அமைந்துள்ளது. நிச்சயமாக என்னால் இயன்ற அளவு கட்டுரையை மேம்படுத்த ஆவன செய்கிறேன் ஐயா. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 17:16, 12 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]