பேச்சு:நான்கு ஆசியப் புலிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நான்கு ஆசியப் புலிகள் எனலாகாதா?--Kanags \உரையாடுக 10:48, 24 பெப்ரவரி 2011 (UTC)

தலைப்பை நான்கு ஆசியப் புலிகள் என மாற்றலாம். --குறும்பன் 21:12, 24 பெப்ரவரி 2011 (UTC)

ஆங்கிலத்தில் ஏசியன் என்பார்களா ஆசியான் என்பார்களா? ஆசியான் நாடுகள் என்ற அமைப்பும் உள்ளது. தலைப்பை மாற்ற முன்னர் இதனை உறுதிப்படுத்துவது நல்லது.--Kanags \உரையாடுக 23:26, 25 பெப்ரவரி 2011 (UTC)

Four Asian Tigers. இதனை இங்கே இட்டு [1] கேட்டுப்பாருங்கள். --HK Arun 23:35, 25 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி, அப்படியானால் தமிழில் நான்கு ஆசியப் புலிகள் எனவே மாற்றி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 00:08, 26 பெப்ரவரி 2011 (UTC)

பரவாயில்லை (இந்திய ஒலிப்புக்கு அமைவாகவே) மாற்றிவிடுங்கள். --HK Arun 00:18, 26 பெப்ரவரி 2011 (UTC)

அது இந்திய ஒலிப்பு அல்ல, தமிழ் ஒலிப்பு:) மேலும், இந்த உறுப்புரிமைக்கும் ஆசியான் அமைப்புக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 00:22, 26 பெப்ரவரி 2011 (UTC)

அது இலங்கை வழக்கு எனப் போட்டிருக்கிறீர்கள். யார் இப்படிப் பயன்படுத்தினார்கள் எனக் கூறுவீர்களா?--Kanags \உரையாடுக 00:26, 26 பெப்ரவரி 2011 (UTC)

கட்டாயம், இதனை (ஹொங்கொங்கில் உள்ள ஈழத்தவர்கள்) ஆங்கிலத்தில் ஃபோ ஏசியன் டைகர்ஸ் என்றுதான் கூறுவோம். இலங்கையில் தமிழர்கள் Asia என்பதனை ஆங்கிலத்தில் ஒலிக்கும் போது ஏசியா என்று இயல்பாகவே வந்துவிடுகிறது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தானியர் ஆசியா என இயல்பாகவே ஒலித்து வருகின்றனர். எழுதும் போது ஏசியா, ஏசியன் என எழுதுவோரும் இருக்கின்றனர். இங்கே[2] பார்க்கவும். இருப்பினும் ஆசியா என எழுதினாலும் ஒலிக்கும் போது ஏசியா என்றுதானே ஒலிக்கிறோம்? மேலும் (The word Asia originated from the Greek word Ἀσία, first used in popular English literature: sometime before 1010) எனவே இச்சொல்லை தமிழ் வழக்கு என்று, ஒலிப்பெயர்த்து தான் உச்சரிக்கிறோம். --HK Arun 00:48, 26 பெப்ரவரி 2011 (UTC)

கூறுவது வேறு, எழுதுவது வேறு. இலங்கையில் ஏசியா என்று தமிழில் யாரும் எழுதியதை நான் பார்க்கவில்லை. அத்துடன் ஆசியா என எழுதியதை ஏசியா என வாசிப்பவர்களையும் நான் அறியேன். ஆங்கிலத்தில் கதைக்கும் போது அல்லது ஆங்கிலம் கலந்து தமிழில் கதைக்கும் போது மட்டும் ஏசியா எனப் பயன்படுத்துவர். அவ்வாறே இந்தியாவிலும் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக தமிழில் ஏசியா என நீங்கள் எழுத நினைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. நிச்சயமாக அதனை நான் எதிர்க்கிறேன். ஆசியா கட்டுரையின் தலைப்பை ஏசியா (இலங்கை வழக்கு) என எழுதலாமா? ஆங்கில ஒலிப்புகளை தமிழ் மொழிக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுகின்றோம். England என்பதைத் தமிழில் இங்கிலாந்து என்று தானே எழுதுகிறீர்கள்? இங்க்லண்ட் என எழுதுகிறீர்களா என்ன? தமிழில் கதைப்பவர்கள் இங்க்லண்ட் என்றே சொல்லுவார்கள். விக்கிப்பீடியா கட்டுரைகள் எழுதும் போது பேச்சுத் தமிழில் இல்லாமல் எழுத்துத் தமிழிலேயே எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 01:30, 26 பெப்ரவரி 2011 (UTC)

//இலங்கையில் ஏசியா என்று தமிழில் யாரும் எழுதியதை நான் பார்க்கவில்லை// இங்கே[3] ஏசியா 38,200 உள்ளன. நீங்கள் பார்க்கவில்லை என்பதால் இட்டுள்ளேன். அவ்வாறு தான் எழுதவேண்டும் என நான் கூறவில்லை. நல்ல தமிழ் எழுத்து நடையில் எழுதுவேண்டும் எனும் எண்ணமே என்னுடையதும் ஆகும். --HK Arun 01:53, 26 பெப்ரவரி 2011 (UTC)

இலங்கை வழக்கும் நான்கு ஆசியப் புலிகள் என்றுதான் வழங்கப்படுகின்றது. ஆகவே திருத்திக் கொள்வதுதான் சரி--சஞ்சீவி சிவகுமார் 06:31, 20 சனவரி 2012 (UTC)