பேச்சு:நாட்டுப்புறம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

rural என்ற சொல்லுக்குப் பெரும்பாலும் ஊரக என்ற சொல் தமிழ்நாட்டில் ஆளப்படுகிறது என்று நினைக்கிறேன். நாட்டுப்புறம் என்பது பெரிதும் பேச்சு வழக்கில் இருக்கிறது. ஊரகம், ஊர்ப்புறம், நாட்டுப்புறம் ஆகியவற்றில் எந்தச் சொல்லை முதன்மைப்படுத்துவது?--ரவி 12:08, 10 ஆகஸ்ட் 2008 (UTC)

நாடு[தொகு]

கிராமப் புறப் பகுதிகளைக் குறிக்க நாடு என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. நாடு காடெல்லாம் திரிந்து பொருள் தேடி வருகின்ற வணிகர் பற்றிய குறிப்புக்களிலும் வெறுமனே நாடு என்ற சொல்லே ஆளப்பட்டுள்ளது. அவ்வாறே நாட்டுக்கோழி, நாட்டு மருத்துவம், நாட்டான் போன்ற சொற்களும் நாடு என்ற சொல்லையே முதன்மையாகக் கொண்டிருக்கின்றன.--பாஹிம் (பேச்சு) 02:33, 3 மார்ச் 2015 (UTC)

இலங்கையில் எமது ஊரிலிருந்து கிராமப் புறங்களுக்கு வணிக நோக்கில் செல்வோர் தாம் நாட்டுக்குச் செல்வதாகவே உரைப்பர். "நான் நாட்டிலிருந்து இதை வாங்கினேன்", "நான் நாட்டுக்குப் போய்த்தான் வாங்கி வர வேண்டும்", "நாட்டில் கிடைப்பது போன்ற கலப்படமற்ற பொருட்கள் நகரத்தில் கிடைப்பதில்லை", "நாட்டு மக்கள் கடின உழைப்பாளிகள், நகரத்திலுள்ளோரைப் போன்று சோம்பேறிகளல்ல", "நாட்டில் கிடைத்தால் நகரத்திலும் கிடைக்க வேண்டுமா", "அவன் நாடு நகரமெல்லாம் அலைந்து திரிந்தான்" என்றெல்லாம் கூறுவது வழமை. இவற்றிலெல்லாம் வெறுமனே நாடு என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 02:55, 3 மார்ச் 2015 (UTC)