உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:திருத்தந்தை பிரான்சிசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை பிரான்சிசு என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

விக்கியாக்கம் செய்தல்

[தொகு]

ஜெயரத்தின மாதரசன், தாங்கள் இக்கட்டுரையை மேம்படுத்த முயன்றுகொண்டிருக்கும்போது நானும் கட்டுரையை விரிவாக்கினேன். இப்போது தாங்கள் விக்கியாக்கம் செய்யலாம். நான் மீண்டும் இடுகை செய்ய பல மணிகள் ஆகும்.--பவுல்-Paul (பேச்சு) 04:13, 14 மார்ச் 2013 (UTC)

திரு.பவுல், நீங்கள் ஒருமணி நேரம் வரை எத்தோகுப்பும் செய்யாததாலேயே நான் செய்தேன். என்னால் ஏதேனுல் சிக்கல் நேர்ந்திருப்பின் மன்னிக்கவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:27, 14 மார்ச் 2013 (UTC)

திருத்தந்தை பிரான்சிசு பற்றிய விமர்சனங்கள்

[தொகு]

இக்கட்டுரையில் திருத்தந்தை பிரான்சிசு பற்றிய விமர்சனங்கள் சில இடுகை செய்யப்பட்டுள்ளன. அவை ஆங்கிலம், இத்தாலியம், செருமானியம் போன்ற பல மொழி விக்கிகளிலும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. மேலும் உலகளவில் பல இதழ்கள் அவற்றை வெளியிட்டும் வருகின்றன. அவற்றைச் சுருக்கமாகவாவது தமிழ் விக்கியிலும் தருவது கட்டுரையின் முழுமைக்குத் தேவையே. திருத்தந்தை பிரான்சிசு பற்றி எழுப்பப்படுகின்ற குற்றச்சாட்டுகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அர்ஜென்டீனாவில் வலதுசாரி சர்வாதிகார ஆட்சி நடைபெற்றபோது நடந்த அட்டூழியங்கள் தொடர்பாக எழுப்பப்பட்டன என்பதைக் கட்டுரையில் பின்னணித் தகவலாகத் தரவேண்டும். அந்த ஆட்சியாளர்களை ஆதரிக்க ஹோர்கே மறுத்தார் என்னும் செய்தியும் தரப்பட வேண்டும். அந்த அநீதிகள் நடந்தபோது அவற்றை நேரடியாக எதிர்க்க பெர்கோலியோ தவறினார் என்பது ஒன்று, அந்த அநீதிகள் நடப்பதற்கு அவர் ஒத்துழைத்தார் அல்லது சர்வாதிகார ஆட்சியாளர்களோடு கூட்டுச் சேர்ந்தார் என்பது முற்றிலும் வேறான ஒன்று. இந்த வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, பிற மொழி விக்கிகள் தரும் தகவல்களையும், பெர்கோலியோ அநீதிக்குத் துணைபோகவில்லை என்று கூறுகின்ற ஆதாரங்களையும் இணைத்து இக்கட்டுரையை முழுமை செய்வதே சரி. அதையே அடுத்த முயற்சியாக மேற்கொள்ள எண்ணியுள்ளேன்.--பவுல்-Paul (பேச்சு) 01:26, 17 மார்ச் 2013 (UTC)

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 01:59, 17 மார்ச் 2013 (UTC)
உடன்படுகிறேன். நேரடியாக எதிர்க்கத் தவறினார் என்று மட்டும் இல்லாமல் அவர் ஒத்துழைத்தார் என்றே குற்றம்சாட்டப்படுகிறது. அந்தக் கருத்து வரலாற்றுப் பின்னணியுடன் சேர்ப்பது பொருத்தம். --Natkeeran (பேச்சு) 04:06, 17 மார்ச் 2013 (UTC)

அர்ஜென்டீனாவின் "இழிவான போர்" காலம் (1976-1983) என்ற தலைப்பு அர்ஜென்டீனாவின் கட்டுரையில் இருப்பது தான் பொருத்தம் சிறிய விளக்கம் கொடுத்து அதற்கு தொடுப்பை இங்கு கொடுக்கலாம் முழுவதும் இங்கு இருப்பது தவறு. --குறும்பன் (பேச்சு) 19:13, 28 மார்ச் 2013 (UTC)

நன்றி!

[தொகு]
சிறீகர்சன் இக்கட்டுரையை நன்முறையில் செம்மையாக்கியுள்ளார். நன்றியும் பாராட்டும்!--பவுல்-Paul (பேச்சு) 01:03, 3 செப்டம்பர் 2014 (UTC)