பேச்சு:தத்துவ விவேசினி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில்,ஈச்சுர நிச்சயம் நூல் இருக்கிறது.--≈ உழவன் ( கூறுக ) 17:22, 10 செப்டம்பர் 2013 (UTC)

நல்ல தகவல். மேற் சுட்டப்பட்ட நூல் எத்தனையாவது பதிப்பு என்று அறியமுடியவில்லை.

"“நமது பரத கண்டத்திலே, இந்தக் காலத்திலே மேலைத் தேசங்களில் பிரசித்திபெற்று விளங்கும் பிராகிருத சாத்திரக்கொள்கைகள் நுழைந்து, எமக்குப் பிதிரார்ச்சிதமாகக் கிடைத்த தெய்வக் கொள்கையைப் பெரிதுந் தளர்புறுத்துவனவாயின. ஏறக்குறைய 45, 50 வருடங்களுக்கு முன்னே சென்னை இராசதானியிலே `தத்துவ விசாரிணி’ `தத்துவ விவேசினி’ என்னும் இரண்டு தமிழ்ப் பத்திரிக்கைகள் தோன்றி, இங்கிலாந்து தேசத்தில் இருந்துகொண்டு நாத்திகப் பிரசங்கஞ் செய்துகொண்டுவந்த பிறாட்லா (Bradlaugh 1833-1891) என்பாருடைய கொள்கையைப் பிரதிபாதித்தலிற் பெரு முயற்சி செய்வனவாயின. அந்தப் பத்திரிக்கைகளால் நமது தேசத்துக்கு உண்டாகிய கேட்டைக் கண்டு சகிக்கலாற்றாது, அவற்றின் ஆபாசங்களையெல்லாம், அந்தக் காலத்திலே யாழ்ப்பாணத்திலே நடைபெற்றுவந்த `உதயபானு’ என்னும் பத்திரிக்கையிலே எடுத்துக்காட்டிக் கண்டித்து வந்தோம். அங்ஙனம் நாம் அப்பத்திரிக்கையில் எழுதிய வியாசங்களே பின்னர் `ஈச்சுர நிச்சயம்’ என்னும் பெயரோடு புத்தக வடிவமாக எம்மால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டன. அந்நூல் வெளிப்பட்டபின், திருவருள் காரணமாக நாத்திகப் பிரசங்கமும் ஒருவாறு ஒழிந்துவிட்டதெனலாம்.” (பிரபஞ்ச விசாரம். ஈச்சுவர நிச்சயத்தின் இரண்டாம் பாகம், ச. சபாரத்தின முதலியார். 1918 முகவுரை)" [1]

இந்த நூல் இரண்டு காரணங்களுக்காக முக்கியம் பெறுகிறது.

  1. ஈழத்துக்கும் தமிழகத்தும் இடையே நடந்த கருத்துப் பரிமாற்றத்தின் ஒர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அருட்பா மருட்பா தொடர்ச்சியாக இதைக் கருத முடியும்.
  2. தமிழ்ச் சூழலில் நிகழ்ந்த ஒரு முக்கிய கருத்து மோதலின் ஆதாரமாக இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் தோற்ற வேர்களை ஆய்வு செய்வோருக்கு ஒரு முக்கிய ஆதாராமாக விளங்கும் என்று நினைக்கிறேன்.

--Natkeeran (பேச்சு) 17:34, 10 செப்டம்பர் 2013 (UTC)

எனது அப்பாவின் மாமாவும், பெரியாரும் நெருங்கிய நண்பர்கள். ஈரோட்டில் ஒரே தெருவில் வசித்தவர்கள். எனது அப்பா சிறுவனாக இருந்தபோது, பெரியார் வீட்டில் நடந்த நிகழ்வுகளை நேரடியாக பார்த்திருக்கிறார். குறிப்பாக அறிஞர் அண்ணா பற்றியும், எனது அப்பா கூறும்போது, எனது உளம் மகிழ்ந்து, கண்கள் பனிப்பதுண்டு. சுயமரியாத இயக்கம் என்று நீங்கள் குறிப்பிட்ட போது, பல உரையாடல்கள் நினைவுக்கு வந்தது. இன்றுள்ள தி.க. நண்பர்களை பலரை பார்க்கும் போது, மனம் நொந்துபோகிறது. சென்னைக்கு இம்மாத இறுதியில் வரும் எண்ணமுண்டு. அப்படி வந்தால் ஓரிரு நாட்களுக்கு முன் அந்நூலகம் சென்று படியெடுக்க முயற்சிக்கிறேன். நீங்களும் வருவது போல தெரிகிறது. வரின் மிக்க அகமகிழ்வேன்.சந்திப்போம்.வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 17:44, 10 செப்டம்பர் 2013 (UTC)

ஆசிரியர் பற்றிய தகவல் - மேற்கோள் தேவை - பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்தப்படுகின்றது[தொகு]

"19ஆம் நூற்றாண்டைய பகுத்தறிவுக் கிழமை இதழாகிய தத்துவ விவேசினி, பு. முனிசுவாமி நாயகரால் 1882 முதல், 1888 வரை நடத்தப்பட்டதாகும்." --Natkeeran (பேச்சு) 17:54, 21 சூன் 2016 (UTC)[பதிலளி]

மேற்கூறிய தகவலை கட்டுரையில் இணைக்கலாமா? ஏன் பேச்சுபக்கத்தில் மட்டும் எழுதுகிறீர்கள்? --உழவன் (உரை) 23:35, 21 சூன் 2016 (UTC)[பதிலளி]
தகவலில் தெளிவில்லை. மேற்கோள் தரப்பட்ட தகவலுடன் முரண்படுகின்றது. பு. முனிசுவாமிநாயகர் ஆசிரியராக இருந்தாரா அல்லது புரவலராக இருந்தாரா, சென்னை இலௌகிக சங்கத்தால் உறுப்பினராக இருந்து வெளியிட்டார என்பதில் தெளிவுவேண்டும். --Natkeeran (பேச்சு) 16:31, 22 சூன் 2016 (UTC)[பதிலளி]
சரி. சென்னை சென்ற போது, முத்தையா நூலகம் செல்ல மறந்து விட்டேன். அடுத்தமுறை முயற்சிக்கிறேன்--உழவன் (உரை) 23:03, 22 சூன் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தத்துவ_விவேசினி&oldid=2079938" இலிருந்து மீள்விக்கப்பட்டது