தத்துவ விவேசினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தத்துவ விவேசினி என்பது சுயசிந்தனை (Free Thought), பகுத்தறிவு (Rationalism), சமயசார்பின்மை (Secularism), இறைமறுப்பு (Atheism) போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி சென்னை இலௌகிக சங்கத்தால் 19 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட ஓரு தமிழ் இதழாகும்.[1] இந்த இதழை பு. முனிசுவாமி நாயகர் முன்னின்று 1882 முதல், 1888 வரை நடத்தினார்.[மேற்கோள் தேவை]

இதன் இதழ்களைத் தொகுத்து வே. ஆனைமுத்து இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். இவ்விரு தொகுப்புக்களுக்கும் இவர் ஆராய்ச்சி முன்னுரைகளும் வழங்கி உள்ளார்.[2]

இந்த இதழை மறுத்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த உதயபானு பத்திரிகையில் பல கட்டுரைகளும், அதன் தொகுப்பான ஈச்சுர நிச்சயம் என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளன. இதனூடாக அக்காலத்தில் நடைபெற்ற கொள்கை விவாதத்தில் இந்த இதழ் முக்கிய பங்காற்றியுள்ளது என்பது தெளிவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. சென்னை இலௌகீக சங்கம்
  2. ‘திருச்சி வே. ஆனைமுத்து கருத்துக் கருவூலம்’
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவ_விவேசினி&oldid=2784049" இலிருந்து மீள்விக்கப்பட்டது