பேச்சு:தடுப்பு மருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png தடுப்பு மருந்து உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
P medicina.svg மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் தடுப்பு மருந்து எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தடுப்பு மருந்து[தொகு]

“தடுப்பு மருந்தானது தடுப்பூசி மூலம் உடலினுள் செலுத்தப்படும்” என்று இக்கட்டுரையிலுள்ளது. இளம்பிள்ளைவாதத்திற்கான தடுப்பு மருந்து சொட்டு மருந்தாக குழந்தையின் வாயில் செலுத்தப்படுகிறதே... மேலும் சில குழந்தைகளுக்கான தடுப்பு மருந்துகள் வாயில் உட்செலுத்தப்படுவதாக இருக்கிறதே...? ---தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:12, 6 சூலை 2011 (UTC)

தேனியார் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி‌. தடுப்பூசி எனும் கட்டுரைத் தலைப்பையும் தடுப்பு மருந்தேற்றம் என்று மாற்றி உள்ளடக்கங்களையும் ஓரிரு நாட்களுக்குள் மாற்ற முயற்சிக்கிறேன். தாங்கள் நிர்வாகப் பணிகளைச் செவ்வனே செய்து வருவது மகிழ்வளிக்கிறது. என்னுடைய கட்டுரைகளை நான் ஒரே கோணத்தில் பார்ப்பதால் தவறுகள் தெரிவதில்லை. பிறர் வேறு கோணத்தில் பார்க்கும் போது தான் அதில் உள்ள தவறுகள் தெரிய வருகிறது. நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 10:14, 6 சூலை 2011 (UTC)