பேச்சு:தஞ்சாவூர் குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்[தொகு]

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.47இல் இக்கோயில் Sri Gurukula Sanjivi Koil என்றும், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997இல் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் வ.எண்.47இல் இக்கோயில் அருள்மிகு குருகுல சஞ்சீவி திருக்கோயில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் என்றழைக்கப்படுகிறது. மேலும் விவரங்கள் பெற்ற பின் பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:27, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]