பேச்சு:டைட்டன் (துணைக்கோள்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைட்டன் (துணைக்கோள்) என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பூமியின் துணைக்கோள் நிலவு என்று அழைக்கப்படுவதால். டைட்டன்(துணைக்கோள்) போன்று பொதுப் பெயர் வைக்கலாம் என பரிந்துரைக்கிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 04:33, 5 மே 2012 (UTC)[பதிலளி]

பூமிக்கு மட்டுமல்லாமல் அனைத்து கோள்களுக்கும் இயற்கைத் துணைக்கோள் அல்லது நிலவு உண்டு. இரண்டும் ஒரு பொருள்படக்கூடியது என கருதுகிறேன்.. பார்க்க என்சலடசு (நிலவு), சனியின் நிலவுகள்.. மேலும் டைட்டன் (துணைக்கோள்) என வைப்பதும் சரியே.. ( ஃபீபி (துணைக்கோள்) ).. பூமியின் நிலவை நாம் நிலா என அழைக்கிறோம். மற்றவற்றின் நிலவை அதற்குரிய பெயருடன் நிலவு அல்லது துணைக்கோள் என சேர்த்து அழைக்கலாம் என கருதுகிறேன்.. இதுபற்றி மேலும் அறிந்தவர்கள் இருந்தால் கூறவும்--shanmugam (பேச்சு) 04:48, 5 மே 2012 (UTC)[பதிலளி]
நிலவு, நிலா ஆகிய வார்த்தைகள் நம்மில் புவியின் நிலவு எனும் உணர்வையே பெரிதும் தருவதால் டைட்டன் (துணைக்கோள்) எனப்பெயரிடுவதே சரியாகும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:26, 28 மே 2012 (UTC)[பதிலளி]
நிலவு என்பது புவியின் நிலவுடன் குழப்பிக் கொள்ளக்கூடியது தான். துணைக்கோள் என்றே சீராகப் பெயரிடலாம்.--இரவி (பேச்சு) 13:49, 28 மே 2012 (UTC)[பதிலளி]