பேச்சு:டின்டோ பிராஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகுள் மொழிபெயர்ப்பு கருவி மூலம் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்தக் கட்டுரை உரை திருத்தம் செய்யப்பட்டது. --மோகன் திருநீலகண்டன் 04:41, 12 மே 2010 (UTC)[பதிலளி]

நல்ல முன்னேற்றம். நாடுகள் பெயர்களில் அநேகமாக எல்லா கட்டுரைகளிலும் பிழைகள் உள்ளன. அவற்றை கருவியின் வழுவாக எடுத்து செம்மைப்படுத்தலாம். உதாரணமாக தொடுப்புகள் வெனிசில், ரஷ்ய, என்று பிழைகளாக உள்ளது. இவை வெனிசில், ரஷ்ய என்றிருக்கவேண்டும். -- மாஹிர் 06:14, 12 மே 2010 (UTC)[பதிலளி]

கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட மதிப்பீடு - கருத்துகள்[தொகு]

  • முதல் வரியே தவறான மொழிபெயர்ப்பு. Giovanni Brass.. better known as Tinto Brass என்ற ஆங்கில தொடரை ஜியோவன்னி பிராஸ்... என்று அனைவராலும் நன்கு அறியப்படும் டின்டோ பிராஸ் என்று மொழி பெயர்த்திருப்பதால் அர்த்தம் தலைகீழாக மாறியுள்ளது
  • noted especially என்பது சிறப்பான முறையில் அறியப்படுகிறார் என்று வந்துள்ளது. இப்படங்கள் இவருக்கு பெயர் வாங்கித் தந்தவை அல்லது இப்ப்டங்களுக்காக புகழ் பெற்றவர் என்று பொருள் வர வேண்டும்
  • he is best known என்பது அவர் மிகவும் புகழ்பெற்று விளங்கினார். என்று நிகழ்காலம் இறந்த காலமாக மாற்றப்பட்டுள்ளது.
  • Tinto Brass film since post-production was not handled by Brass என்பது தயாரிப்புகளுக்கு முந்தைய பணிகளில் என்று மொழி பெயர்த்திருப்பதால் அர்த்தம் தலைகீழாக மாறியுள்ளது
  • recut என்னும் சொல் மறுதுண்டிப்பு என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மறுதொகுப்பு (திரைப்படடித்தை ரீகட் செய்வதென்றால் ரீஎடிட் செய்வது என்று பொருள்) என்பதே சரியான வார்த்தை
  • Well into his seventies என்ற ஆங்கில தொடர் தனது எழுபதாவது வயதிலும் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எழுபது வயதைக் கடந்தும் என்பதே சரியான மொழிபெயர்ப்பு
  • story and theme structure என்ற ஆங்கில தொடர் 'கதை மற்றும் இசையமைப்பை என்று மாறியுள்ளது. இங்கே Music எப்படி வந்தது?
  • மற்றுமொரு அர்த்தம் தலைகீழாக மாறிய எ.கா

the film contains many of Brass' trademarks and remains his most widely viewed work (and the highest-grossing Italian film released in the United States). என்ற தொடர் அவர் பொதுவாக வலியுறுத்தும் கருத்துக்களே (மற்றும் பெரும்பான்மையான வரவேற்பைக் கொண்டிராத இத்தாலியத் திரைப்படம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது) பெருமளவில் காணப்பட்டது என்று மாறியுள்ள்து. highest grossing என்றால் வசூலில் சாதனைபடைத்த படம். அதை பெரும்பான்மையான வரவேற்பைக் கொண்டிராத என்று மொழிபெயர்த்திருக்கிறார். :-)

  • Impressionism என்றால் ஒரு வித genre. அகப்பதிவீடு / மனத்தாக்கம் என்று வரும். மனக் கிளர்ச்சியைத் தூண்டும் விதத்தில் என்று literal translation செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலக் கட்டுரையில் blue link பார்த்தால் அது என்ன என்று பார்த்து மொழி பெயர்க்க வேண்டும்.
  • how the viewer might see என்பதை பார்வையாளர்கள் எப்படி பார்க்க வேண்டும் என்று மொழிபெயர்த்துள்ளார். பார்வையாளரது கண்களுக்கு தெரிவது போல என்று பொருள் வர வேண்டும்.
  • Television-multicam என்றால் தொலைகாட்சித் தொடர்களில் பயன்படுத்தும் பல நிழற்படகருவிகளைக் கொண்டு படமாகும் உத்தி என்று பொருள். கட்டுரையில் அவர் தொலைக்காட்சியில் தெளிவாகப் பார்ப்பதற்கு ஏற்றவாறு. அதாவது Brass's tenchnique is similar to the milticam one used to film TV shows என்ற கருத்து Brass uses the multicam technique in his films for clear viewing in Televisions என்று மாறுகிறது.
  • அர்ததம் தொலைந்து போன தொடர்:

often accentuate women's buttocks and hairy armpits, almost to the point of fetishizing those particular physical features என்பது பெண்களின் பிட்டம் மற்றும் முடியுடன் கூடிய அக்குள்களை உருவகப்படுத்தும்படியாக இருப்பதுடன், கிட்டத்தட்ட அவர்களின் உடல்ரீதியான சிறப்பம்சங்களைக் குறிப்பிடும்படியாக இருக்கும்.

  • அர்ததம் தொலைந்து போன தொடர்:

He almost always works in a cameo for his friend Osiride Pevarello, என்றால் நண்பரின் படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடிக்கிறார் என்று பொருள். அதை எப்பொழுதும் தனது நண்பர் ஓசிரைட் பெவேரெலோவின் வளர்ச்சிக்காக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார் என்று மொழிபெயர்த்துள்ளார்.

  • animal abuse என்றால் மிருகவதை; தவறாக பயன்படுத்துவது என்று மாறியுள்ளது

சுருக்கமாக : தரம் குறைவான மொழி பெயர்ப்பு. பல இடங்களில் அர்த்ததை உள்வாங்காமல் வார்த்தைகு வார்த்தை மொழி பெயர்த்துள்ளதால், அர்த்தம் தலைகீழாக மாறியுள்ளது.

கூகுள் பதிப்பு[தொகு]

கூகுள் பதிப்பு - [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டின்டோ_பிராஸ்&oldid=2263059" இலிருந்து மீள்விக்கப்பட்டது