பேச்சு:டவுன்-ரவுன் டொராண்டோ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவா, இது டவுன் ரவுன் என்று வருமா. Down Town! --Natkeeran 14:30, 6 ஆகஸ்ட் 2008 (UTC)

D, T இரண்டையும் வேறுபடுத்த டவுன் ரவுன் என எழுதுவதே சிறந்தது.--Kanags \பேச்சு 22:24, 6 ஆகஸ்ட் 2008 (UTC)
இது தமிழக வழக்குக்கும் இலங்கை வழக்குக்கும் உள்ள வழமையான வேறுபாடே. டவுன் ரவுன் என்பதை தமிழகத்தில் Down Rown என்றே படிப்பர்.--சிவக்குமார் \பேச்சு 02:03, 7 ஆகஸ்ட் 2008 (UTC)

Downtown என்பதற்குத் தமிழ்ச் சொல் ஆள்வது குழப்பத்தைத் தவிர்க்கலாம். நடுநகர் என்று சொல்லலாமா? டொரன்டோ நடுநகர் என்று சொல்லலாம். d, t ஐ வேறுபடுத்திக் காட்ட ர பயன்படுத்துவது rஆ tஆ என்று அதை விட பெரிய குழப்பத்துக்கு இட்டுச் செல்லும். டொரண்டோ, torondo என்று ஒலிப்பு தரும். டொரன்டோ என எழுதலாம்--ரவி 03:20, 7 ஆகஸ்ட் 2008 (UTC)