பேச்சு:டங் சியாவுபிங்
Untitled
[தொகு]ஒலிப்பு பெயர்ப்பு சரியாக உள்ளது. டெங் சியாஉ பியாங் என்று என் காதுகளுக்குக் கேட்கின்றன. முதல் சொல், தெங், டங், டெங் என்று எதுவாகவும் இருக்கலாம். இரண்டாவது சொல் சியாஉ அல்லது சியாவு ஆகிய இரண்டும் நெருக்கமான ஒலிப்புதான்.கடைசிச் சொல் பியாங், பியங், பிங் ஆகிய மூன்றும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளன. சீன மொழிச் சொற்களை எப்படி தமிழில் ஓரளவுக்கு சீர் செய்து எழுதுதல் என்று எங்காவது கருத்தாட வேண்டும் (ஆலமரத்தடி?). ஏனெனில், ஒரு சீனக் கருத்தெழுத்தை ஓரிடத்தில் ஒருவாறு எழுதினால், எல்லா இடங்களிலும் அப்படியே எழுதுவது நல்லது. சீன மொழி இவ்வகையில் எளிதானதே (ஆங்கிலம் போல் இடத்துக்கு இடம் மாறுவதல்ல). சீன மொழியில், ஓரொலி குறைந்தது 4 வகையான துடி அல்லது ஆரோசையுடன் (pitch) வருவது ஒன்றுதான் புதிதாக கற்பவர்களுக்குக் கடினம். கீழிருந்து மேலோசை, மேலிருந்து கீழோசை, தாழ் ஓசை, உயர் ஓசை ஆகிய நான்கினையும் தமிழில் குறிக்க ஒரு வகை வகுக்கவேண்டும். நான் செய்து தர இயலும், ஆனால், வரவேற்பு இருக்குமா என அறியேன். புதிதாக ஒன்றை நுழைக்கிறேன் என்று எதிர்ப்பும் கிளம்பலாம். இவற்றின் தேவையை இன்னும் பலர் உணரவில்லை!--செல்வா 16:13, 5 ஜூன் 2008 (UTC)
செல்வா, உங்களின் கருத்துக்களுடன் முற்றிலும் உடன்படுகிறேன். தமிழில் சீன மொழி பற்றி ஒரு சில நூல்களே வெளி வந்துள்ளன. அவையும் என்னிடம் இல்லை. நீங்கள் சொன்ன மாதிரி 4 tones எளிய சீனத்தில் உள்ளன. அவற்றைப் பற்றி ஒரு குறுங் கட்டுரையை தொடங்கவுள்ளேன். சீன ஒலிப்புமுறை மிகவும் சவால் தருகிறது. பின்யின் எழுத்துக்களை அவற்றின் ஆங்கில எழுத்துக்களுடன் குளப்பக் கூடாது. மேலும், நாம் பெரும்பாலும் ஆங்கிலம் வழி சீன தகவல்களைப் பெறுவதால் அது மேலும் ஒரு தடையாக இருக்கிறது. சீன மொழி பற்றி இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் படிக்கிறேன். வெளி உலகுக்கு இது இன்னும் அறியப்படா ஒரு பகுதியாகவே இருப்பதால், மேலும் தகவல்களை இணைக்க விழைகிறேன். தவறுகள் மிகுந்து தொடங்கினாலும், மேலும் மேலும் எமது அறிவை விரிவாக்கலாம் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக உங்களின் முயற்சியை வரவேற்கிறேன். இந்த விடயத்தில் பெரிய எதிர்ப்பு என்று ஏதும் இருக்காது. ஒரு நோக்கில் இணையத்தில் இது தொடர்பான முயற்சி இதுவே முதலவாதகக் கூட இருக்கலாம். நன்றி. --Natkeeran 16:28, 5 ஜூன் 2008 (UTC)
சில உச்சரிப்புகளை சீன நண்பர்களிடம் கேட்டு பார்த்தேன். அதைக் கூட தமிழில் எழுத மிகச் சிரமமாகவே இருக்கிறது. You tube போட்டும் உச்சரிப்பை அவதானிக்கப் பாக்கிறேன். சில வேளைகளில் ஆங்கில விக்கி உச்சரிப்பு ஒலிப்புக் கோப்புக்களையும் தருகிறது. --Natkeeran 16:31, 5 ஜூன் 2008 (UTC)
- நன்றி, நற்கீரன். மேலுள்ள உங்கள் கருத்தை ஆலமரத்தடியிலும் இடுமாறு வேண்டிக்கொள்கிறேன். இங்கே நம் கனடாவில் பல சீன மக்களின் தொடர்புகள் நமக்கு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு முறை நான் படிப்பிக்கும் துறையில் பயன்படும் அவலான்ச்சி பிரேக்'டவும் (avalanche breakdown) என்னும் கருத்தை ஒரு மாணவனுக்கு, வகுப்பு நேரம் கழிந்த நேரத்தில் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்த நேரத்தில், அவனுடன் வந்திருந்த உடன்மாணவன் சற்று புரியாமல் இருக்கவே அவனுக்கு இவன் ^சூஉ பங் (雪崩) (பனிச்சரிவு) என்று விளக்கினான். அப்பொழுது அதனை அவனிடம் கேட்டு என்ன என்று புரிந்து கொண்டேன். ^சூஉ (雪) என்பது நாம் இங்கே குளிர்காலத்தில் பார்க்கும் பனித்தூவிதான். பங் (崩), என்பது சரிவது, திடீர் என்று குலைவதுதான். வெடிப்பு என்னும் பொருளும் சில இடங்களில் கொள்ளும். மற்ற சீன மொழி அறிந்த மாணவர்களிடம் இதே சொல்லை எடுத்துச் சொல்லி இது இதுதானா என்று உறுதிப்படுத்த கேட்டபொழுது வியந்தார்கள். சீன மொழி எழுதுவதும் பேசுவதும் சற்று கடினம் என்றாலும், முயல, முயலத் தேர்ச்சி கூடும், பிழைகள் குறையும். இலத்தீன் எழுத்துக்களில் இடும் ஒலிப்புகளை ஆங்கில ஒலிப்புடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. எடுத்துக்காட்டாக அவர்கள் q என்று எழுதுவது. தமிழில், ஒலித்திரிபுக்குறிகளுடன் ஓரளவிற்கு நல்ல துல்லியத்துடன் எழுதிக்காட்ட இயலும் என்று நம்புகிறேன். இவற்றின் தேவைகளை உணர்வது முக்கியம் என்று நினைக்கிறேன். --செல்வா 16:52, 5 ஜூன் 2008 (UTC)
இந்த தலைப்பு இரண்டு கட்டுரைகளைக் கொண்டுள்ளன. இரண்டையும் இணைத்துவிடவும். சரியான பெயர் (Deng Xiaoping) டேங் சியோபிங், டாங் சியாவுபிங் அல்ல. --HK Arun 20:47, 22 பெப்ரவரி 2011 (UTC)
- கட்டுரைகளையும் வரலாறுகளையும் ஒன்றிணைத்திருக்கிறேன். தலைபினை மாற்றவில்லை (ஒலிப்பு குறித்த மதிப்பீடு மாண்டரின்/காண்டனீசு பற்றி அறிந்தவர்கள் செய்வதே சரி)--சோடாபாட்டில்உரையாடுக 04:27, 23 பெப்ரவரி 2011 (UTC)