பேச்சு:ஜமீன் தேவர்குளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜமீன் தேவர்குளம் கிராமம், தமிழ்நாடு அரசு இணையதள வரைபடத்தில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் இளயரசேனந்தல் வருவாய் பிர்காவிலும், திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே கிராமம் இரண்டு மாவட்ட ஆட்சியரின் கீழ் வருமா? --ஸ்ரீதர் (பேச்சு) 17:55, 8 சனவரி 2015 (UTC)[பதிலளி]

ஒரே பெயரில் உள்ள ஊர்கள் இரண்டு மாவட்டங்களிலும் இருக்கலாம். அப்படி இல்லை எனில், இந்த ஊரானது ஒரு மாவட்ட எல்லைக்குள் இருக்கும். ஆனால், வருவாய்க் கோட்டப் பிரிவின் படி மற்றொரு மாவட்ட எல்லைக்குள் வரக்கூடும். சாதாரண மாவட்டத்தைத் தவிர, காவல் துறையினர், விவசாயத் துறையினர், வருவாய்த் துறையினர் என ஒவ்வொருவரும் நிலப்பரப்பை தங்கள் அளவுகோலின் படி மாவட்டங்களாகப் பிரித்து கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடும் அல்லவா! ஒரு மாவட்டத்தை விவசாயத் துறையினர் இரண்டு மூன்று விவசாய மாவட்டங்களாகப் பிரித்து கணக்கில் எடுப்பதும் உண்டு. தேர்தல் ஆணையமும் ஒரு மாவட்டத்தில் உள்ள சில ஊர்களை மட்டும் மற்றொரு மாவட்டத்தின் தேர்தல் தொகுதியுடன் இணைத்துக் கொள்வதுண்டு. ஆகவே, ஒரு மாவட்ட எல்லைக்குள் உள்ள ஊர், வருவாய்த் துறையின் எல்லை வரையறைக்குள் மற்றொரு மாவட்ட/கோட்ட எல்லையில் வர வாய்ப்பு உள்ளது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 19:01, 8 சனவரி 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜமீன்_தேவர்குளம்&oldid=1783218" இலிருந்து மீள்விக்கப்பட்டது