பேச்சு:செல் பயர்பாக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உமாபதி, தலைப்பை படித்தவுடன் சிரித்து விட்டேன் :) நிச்சயமாக இதை விட எளிமையான, சுருக்கமான பெயரை portable edition என்ற சொல்லுக்கு உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால், portable tv, portable dvd player என்று பல இடங்களிலும் பயன்படும். ஆனால், தற்போதைக்கு எனக்கு ஆலோசனைகள் ஏதும் இல்லை. --ரவி 13:00, 17 செப்டெம்பர் 2006 (UTC)

ரவி, நகைச்சுவையாக எழுதுகிறேன் போலத்தெரிகிறது :). Webster இன் அகராதியைப் பார்த்தபோது portable TV இற்கு கையடக்கமான தொலைக்காட்சியென்று போடலாமென நினைக்கின்றேன். Firefox portable edition இற்கு நல்ல தமிழை விக்கிப்பீடியர்கள் தெரிவித்தால் அவற்றுள் சிறந்தவொன்றைத் தீர்மானிக்கலாம். அண்மையில் என்னுடைய நண்பர்கள் இருவர் பல சிரமத்தின் மத்தியில் உலாவும் நிலையங்களில் (Browsing Center) இல் பயர் பாக்ஸ் உலாவி கிடைப்பதில்லை என்றும் தம்மிடம் USB flash Disk இருப்பதாகவும் தெரிவித்தனர். இணயத்தில் தேடியபோது இக்கட்டுரை கிடைத்தது. பலரிற்கும் பயன்படும் என்றே நினைக்கின்றேன். --Umapathy 15:09, 17 செப்டெம்பர் 2006 (UTC)

உமாபதி, portable edition பற்றிய தகவல் எனக்குப் புதியதும் அனைவரும் அறிய வேண்டிய முக்கியத் தகவலும் தான். அதில் சந்தேகமேயில்லை. கட்டுரையைத் துவக்கியதற்கு நன்றி. portable என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஒரே ஒரு ஈடான தமிழ்ச் சொல் இருக்கிறதா, உருவாக்க முடியுமா எனத் தெரியவில்லை. கையடக்கம் என்று சொல்லலாம் தான். ஆனால், எல்லா இடங்களுக்கம் பொருந்தாது. portable tv உண்மையில் கையடக்கமாக இருக்க அவசியம் இல்லை. தூக்கிச் செல்லத் தக்க அளவு எடை குறைவாக இருக்கும். அதே நேரம் portable dvd player கையடக்கமாகவும் இருக்கலாம். firefox portable editionக்கு கையடக்கம் என்ற சொல் முற்றிலும் பொருந்தாது. எனவே, contextக்கு ஏற்றவாறு தான் மொழிபெயர்க்க வேண்டும்--ரவி 18:24, 17 செப்டெம்பர் 2006 (UTC)

காவத்தக்க பதிப்பு?, கொண்டுசெல் பதிப்பு? --மு.மயூரன் 22:03, 17 செப்டெம்பர் 2006 (UTC)

செல் பேசி, செல் தொலைக் காட்சி, செல் வட்டு, செல் பயர்பாக்ஸ் என்றெல்லாம் சொல்லலாம். செல் என்பது செல்லுமிடமெல்லாம் எடுத்துச்செல்லக்கூடிய கருவி என்பதைக் குறிக்கப் பயன்படும் ஒரு முன்னொட்டுச் சொல்லாகக் கொள்ளலாம். செல்லக்கூடிய கருவி செல் கருவி. அது மென்பொருளாகவோ, வேறு வன்பொருளாகவோ இருக்கலாம். pocket, hand-held போன்ற முன்னொட்டுகளோடு, சிறிய என்னும் பொருள் தருமாறு வரும் சொற்கோவைகளுக்கு கை, கையடக்க, குறும் முதலிய முன்னொட்டுகள் தரலாம். --C.R.Selvakumar 01:11, 18 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா


நன்றி மயூரன், செல்வா. அவர்களின் இணையத்தளத்தில் பிரயோக மென்பொருளின் பின்னர் portable என்றசொல்லை தற்போது சேர்த்து வ்ருகின்றார்கள் ஆரம்பத்தில் Portable என்னபதை முன்னுக்கும் பின்னர் பிரயோகத்தின் பெயரையும் சேர்த்தனர் இதற்கான காரணாமாகப் பிரயோகத்தின் பெயர் முன்னுக்கு வந்தால் இலகுவாக மென்பொருளை அடையாளம் காணலாம் என்று ஓர் கருத்தையும் தெரிவித்துள்ளார்கள் எனினும் இது தமிழிற்குப் பொருந்துமா என்பது தெரியவில்லை. ஏனெனில் அநேகமாக பயனர்கள் தேடு பொறிமூலமே கட்டுரையை அடைகின்றனர் என்றே நான் நினைக்கின்றேன். ஆகவே செல்வாவின் ஆலோசனைக் அமைவாக செல் பயர்பாக்ஸ் என்றவாறு பக்கத்தை நகர்த்தாலாம் என்றுள்ளேன். இதற்கான விளக்கம் நன்றாகவுள்ளது. மயூரனின் ஆலோசனையை ஏற்று மீள்வழிநடத்தல் பக்கங்களை உருவாக்கி விடலாம். --Umapathy 04:35, 18 செப்டெம்பர் 2006 (UTC)