பேச்சு:செயற்கை நரம்பணுப் பிணையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணிக் கணித அடிப்படை என்ற ஒற்றைத் தகவலைத் தவிர மற்றனைத்தும் செயற்கை நரம்பணு கட்டுரையில் ஏற்கனவே உள்ளது. இன்னும் கூடுதலான தனித்துவமான, விரிவான தகவல் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.--இரவி (பேச்சு) 14:28, 15 மே 2014 (UTC)[பதிலளி]

ஏற்கனவே உள்ளதால், இங்கும் இருப்பதில் என்ன தவறு? இது ஒரு பொதுக் கட்டுரை. செயற்கை நரம்பணு அதன் ஒரு உப தலைப்பு. ஆகவே இரண்டிலும், சில தகவல்கள் ஒன்றாக இருப்பதில் ஆச்சரிப்பட ஒன்றுமில்லை. --Natkeeran (பேச்சு) 16:36, 15 மே 2014 (UTC)[பதிலளி]
  • In computer science and related fields, artificial neural networks (ANNs) are computational models inspired by an animal's central nervous systems (in particular the brain) which is capable of machine learning as well as pattern recognition. Artificial neural networks are generally presented as systems of interconnected "neurons" which can compute values from inputs.
  • An artificial neuron is a mathematical function conceived as a crude model, or abstraction of biological neurons. Artificial neurons are the constitutive units in an artificial neural network.

ஆங்கில விக்கியிலும், இரண்டின் அறிமுகத்திலும் ஒரே தகவல்தான் இருக்கிறது. கட்டுரை வளரவில்லை என்பதால் குறுங்கட்டுரைகளை நீக்கும் போக்கின் ஓர் எடுத்துக்காட்டாகவே உங்களின் இந்த வார்ப்புரு சேர்த்தலைப் பாக்கிறேன். --Natkeeran (பேச்சு) 16:43, 15 மே 2014 (UTC)[பதிலளி]

நற்கீரன்

//கட்டுரை வளரவில்லை என்பதால் குறுங்கட்டுரைகளை நீக்கும் போக்கின்//

தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தின் கருத்துக்கு எதிராக எங்கு இவ்வாறு குறுங்கட்டுரைகள் விடாப்பிடியாக நீக்கப்பட்டன என்று சுட்ட முடியுமா?

மேம்படுத்தும் நோக்கில் குறித்த கால நீக்கல் வார்ப்புரு இடப்பட்ட பல கட்டுரைகள் சிறப்பான மேம்பாடு கண்டுள்ளன. கட்டுரையை விரிவாக்காமல் முன் கூட்டியே இவ்வார்ப்புருவை நீக்குவதன் மூலம் இக்கட்டுரை வளர்வதற்கான ஒரு வாய்ப்பைத் தவற விடுகிறீர்கள் என்றே கருத வேண்டியுள்ளது. மேலும் வலிந்து நீக்கல் வார்ப்புரு இணைக்க விரும்பவில்லை. நன்றி.--இரவி (பேச்சு) 07:33, 16 மே 2014 (UTC)[பதிலளி]